முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீச்சல் போட்டி - டால்பின் பள்ளி மாணவர்கள் சாதனை

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.19 - மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை டால்பின் பள்ளி மாணவர்கள் தங்க பதக்கங்களை வென்று சாதனை நிகழ்த்தினர். மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கிடையிலான நீச்சல் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் மதுரை டால்பின் பள்ளி மாணவர்கள் யோகன், கோவிந்த் சக்கரவர்த்தி ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் வென்று முதலிடத்தை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இருவரும் தனிநபர் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்று தலா 5 தங்க பதக்கங்களையும், ரூ. 5 ஆயிரத்தையும் பரிசாக பெற்றனர்.

   வெற்றி பெற்ற மாணவர்களை டால்பின் பள்ளி தாளாளர் ஏஆர்.ராமநாதன் பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும் பள்ளி முதல்வர் ஏ.பத்மா  வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர் விஜயகுமாரையும் பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்