முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுடன் குட்டி போர் நடத்த இந்தியா ஆயத்தம்-அமெரிக்க

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், பிப்.- 2 - சீனாவுடன் ஒரு குட்டி போரை நடத்துவதற்கு இந்திய ராணுவம் தன்னை  ஆயத்தப்படுத்தி வருவதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட கால உறவுகள் இருந்தாலும்  இரு நாட்டு உறவுகள் ஓரளவு முன்னேற்றமாக இருந்தாலும்  கூட  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை உள்ளிட்ட  பல்வேறு தாவாக்கள் இருந்து வருகின்றன. மேலும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள சீன பகுதியில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சீனாவுடன் ஒரு குட்டி போரை நடத்துவதற்கு இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தேசிய உளவுத்துறையின்  இயக்குனர்  ஜேம்ஸ் கிளாப்பர்  இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார். ஆசிய பசிபிக் பிராந்தியம், இந்து மகா சமுத்திரம், இந்திய - சீன எல்லைப் பகுதி ஆகியவற்றில் சீன ராணுவம் தனது  நிலைகளை வலுப்படுத்தி வருவது இந்தியாவுக்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளது என்றும் இதை முறியடிக்க சீனாவுடன் ஒரு குட்டி போரை நடத்த இந்திய ராணுவம் தன்னை வேகமாக பலப்படுத்தி  வருகிறது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய போர் ஒன்று வருவதற்கு இப்போதைக்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்றாலும்கூட  குறைந்தபட்ச தாக்குதலை  நடத்த இந்திய ராணுவம் தன்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
கிழக்கு ஆசியாவில் அமெரிக்க ராணுவம் நிலை நிறுத்தப்பட்டிருப்பதற்கு இந்தியா ஏற்கனவே தனது  ஆதரவை அளித்துள்ளது என்றும்  சீனாவின் ராணுவ நடமாட்டத்திற்கு அமெரிக்க ராணுவ நிலைகள்  ஆசியாவில் இருப்பது நல்லது என்று இந்தியா கருதுவதாகவும்  அவர் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்