முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரியில் தி.மு.க.வினரால் அரசு பஸ் எரிப்பு

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

பொன்னேரி, மார்ச் 19 - மீஞ்சூரில் நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் தீயிட்டு கொளுத்தப்பட்டது, மின்சாரம் துண்டிப்பு, தனியார் வாகனங்கள் எரிப்பு, கடைகள் உடைப்பு என்று பல்வேறு சம்பவங்களால் மக்கள் மிகவும் பீதியில் உள்ளனர். இதனால் மீஞ்சூர் வட்டாரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மீஞ்சூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு பாரிசிலிருந்து மீஞ்சூருக்கு வந்த அரசு பஸ் அதன் பணிமனையில் வந்து நின்றது. பயணிகள் இறங்கி சென்றனர். வண்டியின் டிரைவரும், நடத்துநரும் இறங்கி சென்றுவிட்டனர். 

அப்போது திடீரென ஒரு கும்பல் பேருந்து நிலையத்தின் உள்ளே நுழைந்து நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை பெட்ரோல், மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திவிட்டு, அதன் அருகிலேயே இருந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் நிரப்பிய லாரியையும் கொளுத்திவிட்டு ஓடி மறைந்து சென்றனராம். பஸ் தீ பிடித்து எரிவதையும், வைக்கோல் லாரி தீப்பிடித்து எரிவதையும் கண்ட பொதுமக்கள் மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு போன் மூலம் தகவலை தெரியப்படுத்தினர். 

விஷயத்தை அறிந்த இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உடனே விரைந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தர, பொன்னேரி தீயணைப்புப்படையினரும், வடசென்னை அனல் மின்நிலைய தீயணைப்புப்படையினரும் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த அரசு பஸ்சையும், தனியார் லாரியையும் அணைத்தனர். இந்த வாகனங்களை கொளுத்தும்போது அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு இச்செயலில் ஈடுபட்டதாக அங்குள்ளவர்கல் தெரிவித்தனர். 

அதுமட்டுமின்றி பொன்னேரி தொகுதி தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம், வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், பா.சங்கர், அ.மணிமேகலை உள்ளிட்ட 4 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். பொன்னேரி தொகுதியில் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களான சுந்தரம், எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், பா.சங்கர் இவர்களுக்குள் எனக்குத்தான் சீட் தர வேண்டும் என்று தலைமை நிலையத்தை தொந்தரவு செய்ததால் கட்சியின் தலைமை இவர்கள் 3 பேரையும் தவிர்த்துவிட்டு பெண் உறுப்பினரான அ.மணிமேகலை என்பவருக்கு நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் வழங்கியது. இதனை தொடர்ந்து வெறுப்படைந்த இந்த 3 நபர்களின் தொண்டர்கள்  இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். 

இதற்கிடையில் மீஞ்சூர் நகரை அடுத்த வல்லூர் கிராமத்தை சேர்ந்த 8 வாலிபர்களை போலீசார் நேற்று முன்தினம் இரவே பஸ்சை கொளுத்தியதாக கைது செய்து திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தில்தான் யாருடைய ஆதரவாளர்கள் அரசு பஸ்சையும், தனியார் லாரியையும் கொளுத்தியதும், அப்பகுதியில் மின்சாரம் துண்டிப்பு, கடைகள் உடைப்பு, இரு சக்கர வாகனங்களை கொளுத்தியது  என்று தெரிய வரும் என்றனர் காவல்துறையினர். 

மேலும் கைது செய்யப்பட்ட 8 பேரும் வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் சீட் கேட்டிருந்த எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் என்பவரின் ஆதரவாளர்களாக இருக்கக்கூடும் என்று காவல்துறையும், பொதுமக்களும் சந்தேகிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்