முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத்குமார் கட்சிக்கு தென்காசி-நான்குநேரி தொகுதிகள் ஒதுக்கீடு

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,மார்ச்.19 - அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ச.ம.க., மு.மூ.க. குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளுக்கு நேற்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இதன்படி தென்காசி மற்றும் நான்குநேரி தொகுதியில் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது. 

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, சரத்குமார் கட்சி, குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மூ.மு.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வை கூட்டணிக்குள் இழுக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இடையில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் நேற்று ஒரு வழியாக அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பும் நீங்கியுள்ளது. 

இந்தநிலையில் நேற்று கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அந்த கட்சி தலைவர்களுடன் பேசி அ.தி.மு.க. ஒதுக்கியது. அதன்படி சரத்குமார் கட்சி தென்காசி,நான்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. செ.கு.தமிழரசன் தலைமையிலான குடியரசு கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த கட்சிக்கு வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவைக்கு பரமத்தி வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. (இந்த தொகுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசு போட்டியிடுகிறார்)  மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கட்சிக்கு ஆம்பூர், ராமநாதபுரம், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடதுசாரி கட்சிகளுக்கும் அவர்கள் கேட்டபடி தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதித்துவிட்டதாக தெரிகிறது. இந்த கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதோபோல் ம.தி.மு.க.வின் நிலை என்பதும் இன்று தெரிந்துவிடும். முன்னதாக அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை இடது கம்யூனிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன், வ.கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன், தே.மு.தி.க. தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி மற்றும் சதீஷ் ஆகியோரும் மற்றும் சரத்குமார், தனியரசு, சேதுராமன் ஆகியோரும் சந்தித்து தொகுதி பங்கீடு பேச்சு நடத்தினர். தொகுதிகளை பெற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர். அப்போது அங்கு குவிந்திருந்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்