முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 -வது 20 -க்கு இந்தியா - ஆஸ்திரேலிய மெல்போர்னில் மீண்டும் மோதல்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன். பிப். - 3 - இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுககு இடையேயான 2 -வது 20 -க்கு 20 போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்தப் போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.  ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் ஆஸி. அணி 4 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.  இதனைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட 20 -க்கு 20 போட்டி நடந்து வருகிறது. கடந்த 1 -ம் தேதி நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆஸி. அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.  இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமானது. இந்த அணியில் மட்டும் தான் 7 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். தவிர, நட்சத்திர வீரர்களும் உள்ளனர். உலக சாதனையாளர்களும் உள்ளனர்.  இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட இந்திய அணியால் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. 

எனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெற இருக்கும் 2 - வது 20 -க்கு 20 போட்டியில் வெற்றி  பெற இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சி எடுத்து வருகின்றனர். கேப்டன் தோனி புதிய வியூகத்துடன் களம் இறங்குகிறார். டி - 20 போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் இன்றைய போட்டியில் முழுத் திறனுடன் ஆடி அணிக்கு வெற்றி பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் இந்திய அணியின் பெளலிங்கும் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. எனவே பெளலர்களும் நன்கு பந்து வீசி அணியின் வெற்றிக்கு பாடுபடவேண்டும். 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக ளுக்கு இடையேயான 2-வது 20 -க்கு 20 போட்டி மெல்போர்னில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டியை ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷன் சேனல்களில் நேரடியாக காணலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்