முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயினால் கைவிடப்பட்ட யானைக்குட்டி வண்டலூர் பூங்கா வந்தது

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.- 3 - பவானி சாகர் அணைப்பகுதியில், தாயினால் கைவிடப்பட்ட 8 மாதயானைக்குட்டி மீட்கப்பட்டு வண்டலூர் பூங்காவில் மற்ற யானை குட்டிகளுடன் சேர்த்து பராமரிக்கப்படுகிறது. இது பற்றி வண்டலூர் பூங்கா இயக்குனர் தெரிவிப்பதாவது:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டம்  பவானி சாகர் வனச்சரகம் பவானி சாகர் அணைப் பகுதியில் 14.12.2011 அன்று தாயினால் கைவிடப்பட்ட சுமார் 8 மாத ஆண் யானைக்குடியானது மீட்கப்பட்டு பவானி சாகர் வனச்சரகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. குட்டியை நிலைப்படுத்திய பின், கைவளர்ப்பிற்காக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 2.2.2012 அன்று காலை தனி வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த குட்டியானது தற்போது nullங்காவிலுள்ள யானைகள் இருப்பிடத்தில் குளிர் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் மற்ற யானைக்குட்டிகளுடன்  சேர்த்து பராமரிக்கப்பட்டு  வருகிறது. மீட்கப்பட்ட யானைக்குட்டியானது மிகவும் பலவீனமாக இருப்பதால் உயிரியல் பூங்கா வன உயிரின மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு சிறப்பு உணவாக இளநீர், லாக்டோஜன், மற்றும் குளுக்கோஸ் ஆகியவை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறையும் மேலும் பசும்புல்லும் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. யானைக்குட்டியின் உடல் நிலை நன்கு தேறியவுடன் பார்வையாளர்களின் பகுதிக்கு  அனுமதிக்கப்படும் என்று வண்டலூர் அண்ணா உயிரியல் nullங்கா இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

படவிளக்கம்

பவானிசாகரிலிருந்து கொண்டுவரப்பட்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்த யானை குட்டியை படத்தில் காணலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago