முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரைவடக்கு சக்கிமங்கலம், கருப்பாயுரைணி பகுதிகளில் சகாயம்ஆய்வு

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை, பிப்.- 3 - சக்கிமங்கலத்தில் ரூ.34.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டு செயல்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் ஆதி, காட்டுநாயக்கர் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு பழங்குடியினருக்கான சாதிசான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். பும்ைபும்ை மாடு வைத்து தொழில் நடத்துபவர்கள் தங்களது இடங்களில் வீடு கட்டி தருமாறு கோரிக்கை வைத்தனர்.  அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.  மேலும் சாட்டையடிப்பவர்கள், ஆதி, காட்டுநாயக்கர், பும்ைபும்ை மாடு வைத்து தொழில் செய்வோர் ஆகியோருக்கு தகுதியுள்ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குமாறு வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.  அதைத்தொடர்ந்து நரிக்குறவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  நரிக்குறவர்கள் பால் மாடு வாங்கித்தருமாறு கோரினார்கள்.  உடனடியாக நரிக்குறவர்கள் 100 பேருக்கு நபார்டு வங்கியின் மூலம் கறவை மாடு வாங்கி பால்பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கருப்பாயுரைணியில் ரூ.26,000டி- மதிப்பில் மராமத்து பணி செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  சுகாதாரம் குறித்த பயிற்சியினை பொதுமக்களுக்கு வழங்கிடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  பின்னர் அங்குள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்தில் இரண்டு தையல் இயந்திரம் வைத்து தொழில் நடத்தி வரும் மகளிருடன் மேலும் நான்கு தையல் இயந்திரம் வாங்கி ஒரு குழுவாக தொழிலை விரிவுபடுத்தி செய்ய உதவிடுமாறு மகளிர் திட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். இளமனுனூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.  மாணவர்களிடம் குறைந்தது இப்பள்ளியில் 10 மாணவர்களாவது மாவட்ட அளவில் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்றார்.  மேலும் ஆதிதிராவிடர் நல விடுதியில் அதிகஅளவில் மரங்கள் மற்றும் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதையும், நூலகத்தையும் பார்வையிட்டார்.    விடுதி சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதை பார்த்து பாராட்டினார்.  அனைத்து விடுதிகளும், இவ்விடுதியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்படவேண்டும் என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர். இந்;த ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் திரு.பால்சுந்தர்ஜான், மாநகராட்சி துணை ஆணையர் (பொறுப்பு) திரு.தேவதாஸ், மதுரை வடக்கு வட்டாட்சியர் திரு.அலெக்ஸாண்டர்ராய், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பாலநரசிம்மரு, திருமதி.ராஜம்மாள், நகரப்பொறியாளர் திரு.மதுரம் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago