முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னரின் உத்தரவை எதிர்க்கும் குஜராத் அரசின் அப்பீல்மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பிப்.- 4 - லோக் ஆயுக்தா நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமனம் செய்து குஜராத் கவர்னர்  பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட குஜராத் மாநில அரசின் அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஒய்வு பெற்ற நீதிபதி  ஆர். ஏ. மேத்தா என்பவரை  லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதியாக  கமலா பெனிவால் நியமனம் செய்து உத்தரவிட்டார்.  இந்த நீதிபதி  மேத்தா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பற்றி பல விமர்சனங்களை செய்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த நீதிபதியை  லோக் ஆயுக்தா நீதிபதியாக நியமிக்க கூடாது என்றும்  இது தொடர்பாக கவர்னர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய  வேண்டும் என்றும் கோரி குஜராத் அரசு  குஜராத் ஐகோர்ட்டில்  அப்பீல் செய்தது. இந்த அப்பீல் மனு மீது விசாரணை நடத்திய  குஜராத் ஐகோர்ட்டு கவர்னர் பிறப்பித்த  உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இதை அடுத்து இப்போது குஜராத் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதியாக மேத்தாவை நியமித்தது  சட்டத்திற்கு எதிரானது என்றும் எனவே கவர்னரின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மேல் முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனு குறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.எஸ். சவுகான், ஜே.எஸ். கேகர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது என்றும் அதனால் நீண்ட விவாதம் நடத்த வேண்டியுள்ளது என்றும் கூறி இந்த மனு மீதான விசாரணையை வருகிற  20 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்