முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணக்காரர்களுக்கு மட்டுமே இனி குடியுரிமை: இங்கிலாந்து

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

லண்டன், பிப். - 4 - இங்கிலாந்தில் ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.  இனி பணக்காரர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அந்நாடு முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியர்களே பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஒரு வெளிநாட்டவருக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டு வருமானம் 31 ஆயிரம் பவுண்டுகளுக்கு குறைவாக இருந்தால் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி விட வேண்டும். ஆண்டு வருமானம் அதிகமானவர்களுக்கு மட்டுமே இனி இங்கிலாந்தில் இடம். இந்தியா போன்ற வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளும் இங்கிலாந்து நாட்டவர்களுக்கு அரசிடம் இருந்து நிதியுதவி பெறுவதை தடுக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்வோருக்கு ஆண்டு வருமானம் உயர்ந்த அளவு இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கவுள்ளதாகவும் குடியேற்ற துறை அமைச்சர் கிரீன் தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்