முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியல் இந்திய வீராங்கனை தீபிகா முன்னேற்றம்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, பிப். - 4 - சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீராங்கனையான தீபிகா பல்லிகள் முன்னேறி 14 - வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்து இருக்கிறார்.  தீபிகாவின் ஸ்வாஷ் வாழ்க்கையில் இது ஒரு புதிய மைல் கல்லாகும். அவர் இதுவரை இந்த இடத்தை பெற்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஸ்பா ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தீபிகா இறுதிச் சுற்றை எட்டியதைத் தொடர்ந்து மேற்கண்ட முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறார். கடந்த வருடம் விஸ்பா போட்டியில் பங்கேற்ற அவர் 3 பட்டங்களை கைப்பற்றினார். இதனால் அவர் சர்வதேச தரவரிசையில் 15 - வது இடத்திற்கு முன்னேறினார். கடந்த மாதம் நடந்த விஸ்பா போட்டியில் பல்லிகள் 6 -வது பட்ட வாய்ப்பை நழுவவிட்டார். இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற அவர் போராடி தோல்வியைத் தழுவினார். நியூயார்க்கில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ஸ்குவாஷ் போட்டியில் நெதர்லாந்து வீராங்கனை நதாலி கிரின்ஹாம் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இருந்த போதிலும், இந்திய வீராங்கனையான பல்லிகள் இறுதிச் சுற்றில் பங்கேற்றதன் மூலம் சமீபத்தில் வெளியான தரவரிசையில் 1 இடம் முன்னேறி 14 - வது இடத்தை பெற்று இருக்கிறார்.  21 வயதிற்கு உட்பட்டோருக்கான முதலாவது உலகக் கோப்பை ஸ்வாஷ் போட்டிகள் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தீபிகா இந்திய அணிக்கு தலைமை தாங்கியது நினைவு கூறத்தக்கது.  20 வயதான இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான தீபிகாகவிற்கு கடந்த 2011 -ம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்தது.இதில் அவர் 3 விஸ்பா பட்டம் வென்றார்.  கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பல்லிகள் தனது முதலாவது விஸ்பா பட்டத்தை கைப்பற்றினார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இர்வின் நகரில் நடைபெற்ற ஆரஞ்ச் கவுண்டி ஓபனில் அவர் இந்த பட்டத்தை வென்றார்.  பின்பு அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியின் இறுதிச் சுற்றில் வென்றதன் மூலம் தீபிகா தனது 2-வது சாம்பியன் பட்டம் பெற்றார்.  ஹாங்காங்கில் நடைபெற்ற குரோகடைல் .சேலஞ்ச் கோப்பைக்கான போட்டியில் பல்லிகள் இந்த வருடத்தில் தனது 3-வது பட்டத்தை கைப்பற்றினார். டிசம்பர் மாதம் பெற்ற இந்தப் பட்டம் அவருக்கு ஒட்டு மொத்தத்தில் 5-வது பட்டமாக அமைந்தது. 

---------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்