முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் அண்ணா படத்திற்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், பிப்.- 4 - பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகரில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு அ.தி.மு.க. வினர் மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 43வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.  இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் நகர் தேவர் திடலில் அண்ணாவின் திருவுருப்படத்திற்கு அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்ட கடகச்செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள்  மாவட்டச் செயலாளர் ஜெயராமன், மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் அ.தமிழ்ச்செல்வம், திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன், கள்ளிக்குடி யூனியன் சேர்மன் உலகாணி மகாலிங்கம், தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றியச் செயலாளர் பாண்டி,பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், கள்ளிக்குடி யூனியன் துணை சேர்மன் கண்ணன், திருமங்கலம் நகர அவைத்தலைவர் ஜஹாங்கீர், துணைச்செயலாளர் ராஜாமணி, பொருளாளர் துரைப்பாண்டி, சார்பு அணி செயலாளர்கள் வைரன், கவிராஜன், அழகர், நாகையாசாமி, கூடக்கோவில் முருகன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் நிரஞ்சன், கவுன்சிலர் கணவாய் பிச்சை, வார்டு செயலாளர்கள் ஆனந்தன், ரமேஷ், தங்கம் வழக்கறிஞர் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago