முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 19 - பா.ம.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர்  ஜி.கே.மணி எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:​வரும் 13.4.2011 அன்று நடைபெறவிருக்கும் தமிழக சட்ட பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகிறது. இத்தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவரும், முன்னாள் மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் கீழ்கண்டவாறு வெளியிடப்படுகிறது.

வேட்பாளர்கள் பட்டியல்:-

1. மேட்டூர்- ஜி.கே.மணி, 2. ஜெயங்கொண்டம்- ஜெ.குரு, 3. நெய்வேலி- தி.வேல்முருகன், 4. சோழவந்தான்(தனி)- மு.இளஞ்செழியன், 5. ஆலங்குடி- டாக்டர் க.அருள்மணி, 6. கோவில்பட்டி- கோ.ராமச்சந்திரன், 7. அணைக்கட்டு- எம்.கலையரசு, 8. திருப்போரூர்- திருக்கச்சூர் கி.ஆறுமுகம், 9. போளூர்- கோ.எதிரொலி மணியன், 10. ஆர்க்காடு- கே.எல்.இளவழகன், 11. ஜோலார்பேட்டை- கோ.பொன்னுசாமி, 12. செங்கல்பட்டு- வ.கோ.ரங்கசாமி, 13. மதுரவாயல்- கி.செல்வம். 

மீதமுள்ள 17 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.  இவ்வாறு அவர் தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்