முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு இந்தியாமுக்கியம்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், பிப்.- 4 - சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு இந்தியா முக்கியமாக இருக்கிறது என்று அமெரிக்காவின் முன்னாள் மூத்த தூதரக அதிகாரி  ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் தூதரக அதிகாரி நிக்கோலாஸ் பர்ன்ஸ்   தி பாஸ்டன் குளோப் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுத்தியிருக்கிறார்.  அந்த கட்டுரையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உறவுகள் குறித்து அவர் தனது கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார். ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவம் உள்ளிட்ட பல்வேறு  துறைகளிலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் அந்த ஆதிக்கத்தை இப்போது சீனா பிடித்துள்ளது.  அதனால் சீனாவின் செல்வாக்கு  அதிகரித்து வருகிறது.  இந்த  செல்வாக்கை முறியடிப்பதற்கு அமெரிக்காவுக்கு இந்திய நாடு மிகவும் முக்கியம் என்று  அவர் கூறியுள்ளார். இந்த பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ பலத்தை ஆங்காங்கே குவித்து  வல்லமை காட்டி வருகிறது. இது அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆசிய  - பசிபிக் பிராந்தியத்தில் ஜப்பான்,  தென் கொரியா போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு  அமெரிக்கா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார். அமெரிக்கா எந்த நாடுகளுடன்  தனது வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளை ஆதிக்கம் செலுத்தி வந்ததோ அந்தந்த நாடுகளில் சீனாவும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவின் கை  இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. இது அமெரிக்காவின் எதிர்கால திட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அதனால் இந்தியாவின் உதவி அமெரிக்காவுக்கு அவசியமாக இருக்கிறது என்றும் நிக்கோலாஸ் கூறியுள்ளார். அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் ஆட்சியின் போது ஆசிய பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான வெளிநாட்டு அமைச்சராக  இருந்தவர் நிக்கோலாஸ் பர்ன்ஸ் . இவர் இப்போது  ஹவார்ட்ஸ்  கென்னடி சர்வதேச அரசியல் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றி வருகிறார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony