முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 க்கு 20 இந்தியா8விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியவை வீழ்த்தியது

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், பிப். - 4 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற 2-வது 20-க்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெகட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.  இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில் துவக்க வீரர் காம்பீர் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். கோக்லி மற்றும் சேவாக் இருவரும் அவருக்கு பக்கபலமாக ஆடினர்.  இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-வது டி - 20 போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.  ஆஸ்திரேலிய அணி இதில் முதலில் களம் இறங்கியது. அந்த அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 131 ரன்னை எடுத்தது.  ஆஸ்திரேலிய அணி சார்பில் பிஞ்ச் 23 பந்தில் 36 ரன்னை எடுத்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான வாடே 29 பந்தில் 32 ரன்னை எடுத்தார். தவிர, ஜே. ஹஸ்சே 29 பந்தில் 24 ரன்னையும், மார்ஷ் 13 பந்தில் 13 ரன்னையும் எடுத்தனர்.  இந்திய அணி தரப்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பிரவீன் குமார் 21 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ரோகித் சர்மா 29 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். தவிர, ஜடேஜா 1 விக்கெட் எடுத்தார்.  இந்திய அணி 132 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஆஸி. அணி வைத்தது. பின்பு களம் இறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 135 ரன்னை எடுத்தது.   இதனால் இந்திய அணி இந்த 2 -வது 20 -க்கு 20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. இந்திய அணி தரப்பில் துவக்க வீரராக இறங்கிய காம்பீர் அதிரடியாக ஆடி 60 பந்தில் 56 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். தவிர, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கோக்லி 24 பந்தில் 31 ரன்னை எடுத்தார். கேப்டன் தோனி 18 பந்தில் 21 ரன்னை எடுத்தார். துவக்க வீரர் சேவாக் 16 பந்தில் 23 ரன்னை எடுத்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹாக் 19 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். மார்ஷ் 30 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக காம்பீர் தேர்வு செய்யப்பட்டார். 

இரு அணிகளுக்கு இடையேயான டி - 20 முடிவடைந்ததும் அடுத்ததாக முத்தரப்பு ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிறது. இதன் முதல் போட்டி வரும் 5-ம் தேதி துவங்க இருக்கறது. 

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோத இருக்கிறது. 3-வது அணியாக இலங்கை அணி களம் இறங்குகிறது. 

-------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்