முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டியவிவகாரம் உயர்நீதிமன்றத்தில் பதில்மனுதாக்கல்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை.பிப்.- 4  - விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டிய விவகாரம் தி.நகரில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம். இதன் தொடர்பான வழக்கு இன்று உயர்nullநீதி மன்ற தலைமை நீதிபதிகள் எம்.ஓய் இக்பால் மற்றும் nullநீதிபதி டி.சிவஞானம் அடங்கிய முதன்மை பெஞ்சு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்பொழுது தமிழக அரசின் சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.விதிமுறை மீறிய கட்டிடங்களை வரைமுறைப்படுத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.2007 ம் ஆண்டு வரை கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என அரசுக்கு அந்த கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.அந்த பரிந்துரையை அரசு பரிசீலித்து  வருகிறது. தரைதளம் முதல் மாடி கட்டுவதற்கு அனுமதி பெற்று பிறகு முதல் மாடி மேல் 7மாடிகள் கட்டியுள்ளனர். தரைதளம் கட்டுவதற்கே அனுமதி பெறாமல் 7 மாடிகள் கட்டிய 10 கட்டிடங்கள் உள்ளன. இதுமட்டும்யில்லாமல் அரசு நிலங்களை பெரும் அளவில் கையகப்படுத்தி கட்டிய கட்டிடங்கங்கள் பல உள்ளன. விதிமுறை  மீறிய கட்டப்பட்ட கட்டிடங்களின் பல கோண வழக்குகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது அந்த அனைத்து வழக்குகளின் நிலையை அரசு ஆராயவேண்டும்,மேலும் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று அரசு மனுவில் கூறப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து வழக்கு விசாரனை வரும் பிப்ரவரி 8 ம்தேதிக்கு  தலைமை நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்