முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரத்திற்கு எதிரான சுப்பிரணியம்சாமியின் மனு சி.பி.ஐ. கோர்ட்டில் டிஸ்மிஸ்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, பிப்.- 5 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும்  சேர்க்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சி தலைவர் சப்பிரமணியம்சாமி தாக்கல் செய்திருந்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நேற்று டிஸ்மிஸ் செய்தது. 2 ஜி ஸ்பெக்ட்ரம்  ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு  அறிக்கை வெளியிட்டதை அடுத்து மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் பதவியை தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா ராஜினாமா செய்தார்.  இதை அடுத்து  அவர் மீது சி.பி. ஐ. அதிகாரிகள் வழக்கு பததிவு செய்தனர். பிறகு ஆ.ராசாவிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ம் தேதி அவரை கைது செய்தனர். அதன் பிறகு ராசா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதும் அவர் சிறையில்தான் உள்ளார். இந்த வழக்கில் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்ய  சபை எம்.பி.யும், கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழியும்  மேலும் பலரும் கைது செய்யப்பட்டு அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். கனிமொழி உள்ளிட்ட சிலருக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து அவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். ஆ.ராசா உள்ளிட்ட மற்ற சிலர் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம்சாமி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சுப்பிரமணியம்சாமி ஏற்கனவே  இது தொடர்பாக ஒரு மனுவை தாக்கல் செய்திருப்பதால் இந்த வழக்கில் சிதம்பரத்தை  சேர்ப்பதா வேண்டாமா என்பதை அந்த சி.பி.ஐ. கோர்ட்டே தீர்மானிக்கும் என்று உத்தரவிட்டது. இதை அடுத்த சுப்பிரமணியம் சாமியின் அந்த மனு மீது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி. சைனி நேற்று விசாரணை நடத்தினார். - இந்த  வழக்கில் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாக  சேர்த்து அவரிடம் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட வேண்டும் என்ற உங்களது ( சுப்பிரமணியம் சாமியின் ) மனுவை டிஸ்மிஸ் செய்துள்ளேன் - என்று நீதிபதி சைனி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா மீது  மேலே பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி  சுப்பிரமணியம் சாமி தாக்கல் செய்துள்ள இன்னொரு மனு மீது வருகிற மார்ச் 17 ம் தேதி விசாரணை தொடங்கும் என்றும் நீதிபதி சைனி கூறினார். கடந்த 2008 ம் ஆண்டு ஆ.ராசா தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார் என்றும் எனவே இநத 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விலை நிர்ணயம் குறித்து  சிதம்பரத்திற்கும் தெரிந்திருக்கும் என்றும் எனவே  அருக்குள்ள  பங்கு குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும்  சாமி தனது மனுவில் கூறியிருந்தார். ஆனால் இவரது மனுவை சி.பி.ஐ.சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி நிராகரித்து விட்டார். இது சுப்பிரமணியம் சாமிக்உக  பின்னடைவை ஏற்படுத்ததி உள்ளது. ஆனால் அதே நேரத்தில்  மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு  ஆறுதலை அளித்துள்ளது.
என்றாலும்  தான் தனது முயற்சியை கைவிடப்போவதில்லை என்றும்  சி.பி.ஐ.சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய இருப்பதாகவும் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு வெளியான சி.பி.ஐ.கோர்ட்டில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததன. கோர்ட்டு வளாகம் நிரம்பி வழிந்தது.  தீர்ப்பை கேட்க  சம்பந்தப்பட் வக்கீல்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago