முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளவுத் துறை கடிதம் எதிரொலி ராகுலுக்கு கூடுதல் பாதுகாப்பு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பிப். - 5 - உத்தர பிரதேச சட்டசபைக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில் ராகுல் காந்திக்கு வரவேற்பு கிடைத்தாலும், சில இடங்களில் எதிர்ப்பும் காணப்பட்டுள்ளது. குறிப்பாக 2 இடங்களில் அவருக்கு பொதுமக்கள் கறுப்புக் கொடி காட்டினார்கள். இதற்கிடையே பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி போலீஸ் பாதுகாப்பை அடிக்கடி மீறி சென்று மக்களை சந்தித்தார். வாக்காளர்களை கவர்வதற்காக அவர் மக்களை நெருங்கி செல்கிறார். ஆனால் பாதுகாப்பு கொடுக்கும் போலீஸ்காரர்களுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் உளவுத் துறையில் உள்ள வி.ஐ.பிக்கான பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் ராகுல் காந்தியின் பாதுகாப்பு விஷயத்தில் கவலை தெரிவித்து அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். ராகுல் காந்திக்கு ஏற்கனவே தீவிரவாதிகளால் அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில் அவர் மக்களை நெருங்கி செல்ல கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து உத்தர பிரதேசத்தில் மாநில உயர் போலீஸ் அதிகாரிகளை மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள். அதில் ராகுல் காந்திக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கவும், மத்திய, மாநில பாதுகாப்பு படைகள் ஒருங்கிணைந்து செயல்படவும் முடிவு எடுக்கப்பட்டது. இது தவிர ராகுல் காந்தி பங்கேற்க செல்லும் பொதுக்கூட்டங்களில் மக்களோடு மக்களாக சாதாரண உடையில் போலீஸ்காரர்களை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்