முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அச்சுதானந்தன் தேர்தலில் போட்டியிட மீண்டும் அனுமதி

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,மார்ச்.19 - கேரள முதல்வர் அச்சுதானந்தன்  மீண்டும் தேர்தலில் போட்டியிட இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மேலிடம் அனுமதித்திருப்பதாக தெரிகிறது. கேரள மாநிலத்தில் முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு உள்ளது. அச்சுதானந்தனுக்கு தற்போது வயது 87 ஆகிறது. அதனால் கேரளாவில் கடந்த முறை நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அச்சுதானந்தன் போட்டியிட இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மேலிடம் மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வலுக்கவே அச்சுதானந்தன் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த முறையில் அச்சுதானந்தனுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் பிரகாஷ் காரத் கலந்துகொண்டார். அப்போது வரும் மாநில சட்டசபை தேர்தலில் அச்சுதானந்தன் போட்டியிட அனுமதி இல்லை என்று அறிவித்தார். மேலும் அச்சுதானந்தனின் அரசியல் எதிரியான பினராய் விஜயனுக்கும் டிக்கெட் கொடுக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில் வரும் சட்டசபை தேர்தலில் அச்சுதானந்தனுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடது கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் வெற்றிவாய்ப்பு போய்விடுமோ என்ற அச்சத்தில் அச்சுதானந்தன் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருப்பதாக தெரிகிறது. பினராய் விஜயனுக்கும் போட்டியிட அனுமதிக்கலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்