முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் பெண்கள் இறுக்கமானஆடை அணியதடை

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

நகரி, பிப். - 5 - திருப்பதி கோயிலில் பெண்கள் இறுக்கமான உடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி. சுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.  கடந்த சில ஆண்டுகளாக திருப்பதி கோயிலுக்கு வரும் சில பெண்கள் இறுக்கமான பேண்ட், டி. சர்ட் அணிந்து வருகிறார்கள். இதே போல் சில இளம் பெண்கள் துப்பட்டா இல்லாமல் சுடிதார் அணிந்து வருகிறார்கள். இனி இது போல ஆடை அணிந்து வரும் பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்க மாட்டோம். பெண்கள் கண்டிப்பாக புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்துதான் கோவிலுக்கு வர வேண்டும்.  ஆண்கள் லுங்கி அணிந்து கோவிலுக்கு வரக் கூடாது. வேட்டி, சட்டை அல்லது பேண்ட், சட்டை அணிந்துதான் தரிசனத்திற்கு வர வேண்டும். இந்த ஆடை கட்டுப்பாடு சில மாதங்களுக்கு முன்பே கொண்டு வரப்பட்டது. தற்போது அதை தீவிரமாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆடை கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  திருப்பதியை சேர்ந்த திரிதண்டி சின்ன ஜீவா சுவாமிகள் கூறுகையில், திருப்பதி கோவில் தற்போத நள்ளிரவு வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழுமலையானுக்கு போதிய ஓய்வு கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே கோவிலை தினமும் இரவு 10 மணிக்கு மூட வேண்டும். இது பற்றி தேவஸ்தான நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்