முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடவேமாட்டேன் - ஐகோர்ட்டில் அப்பீல்செய்வேன் சுப்பிரமணியம்சாமி

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி. பிப். - 5 - சிதம்பரத்திற்கு எதிராக தான் தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு  தள்ளுபடி செய்தாலும் கூட இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்வேன் என்றும் தனது முயற்சியை கைவிட மாட்டேன் என்றும் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சாமி தாக்கல் செய்த மனுவை அந்த கோர்ட்டின் நீதிபதி ஓ.பி. சைனி நேற்று டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இது குறித்து சுப்பிரமணியம் சாமியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

சி.பி. ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தனக்கு அதிருப்தியை தந்திள்ளது என்றும் ஆனால்  தான் மனம் தளரவில்லை என்றும் சிதம்பரத்திற்கு எதிரான பலமான ஆதாரங்களை கொண்டு தான் டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிதம்பரத்திற்கு எதிராக தன்னிடம் வலுவான  ஆதாரங்கள் இருப்பதாகவும் எனவே இந்த உத்தரவை எதிர்த்து தான் நிச்சயம் ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய இருப்பதாவும் அவர் தெரிவித்தார். சி.பி. ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்க்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாமி சி.பி.ஐ. கோர்ட்டின் இந்த தீர்ப்பு தனக்கு வியப்பை அளித்துள்ளது என்றார். - நான் மற்றொரு கோர்ட்டுக்கு செல்வேன். இநத உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு வழிவகைகள் இருக்கின்றன.  எனவே நான் நிச்சயம் அப்பீல் செய்வேன் - என்றும் அவர் கூறினார். இந்த ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆ.ராசா மற்றும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக தன்னிடம் வலுவான ஆதாரங்கள் இருக்கிறது என்பதை அவர் திரும்ப திரும்ப கூறினார்.  விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நேரடியாக சுப்ரீம் கோர்ட்டில்  அப்பீல் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.  எனவே இந்த வாய்ப்பு குறித்தும் நான் பரிசீலனை செய்வேன் என்றும் சாமி கூறினார்.  - எனக்கு இதெல்லாம் ஒன்றும் புதிதல்ல. எனது மனு டிஸ்மிஸ் செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்றில்லை.  எனவே நான் மேற்கொண்டு மேல் கோர்ட்டில் அப்பீல் செய்வேன் என்றும் அவர் கூறினார்.

சிறப்பு கோர்ட்டு நீதிபதி தனது தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறார் என்பது எனக்கு தெரியாது . அதை முழுமையாக பார்த்த பிறகு நான் எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன் என்றும் அவர் கூறினார்.

இந்த தீர்ப்பால் நீங்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இது ஆட்டத்தின் ஒரு பகுதிதான் . ஒரு வேளை பத்திரிகையாளர்களுக்கு இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம் என்றும் சாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago