முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பாட்டுப்பாடி கவுரவிக்கும் தனுஷ்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,பிப்.- 5 - கிரிக்கெட் வீரர் சச்சின்டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் புதிய பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சச்சினின் தீவிர ரசிகராகிய தனுஷ் (கொலவெறிடி புகழ்) இந்த பாடலை பாடியிருக்கிறார். தனுஷ் சச்சினின் தீவிர ரசிகர் என்பதால் பூஸ்ட் நிறுவனம் தனுஷூடம் இணைந்து இந்த பாடலை உருவாக்கயுள்ளது. தீராத ஸ்டெமினா மற்றும் தனது சாதனைகள் மூலம் நாட்டை பெருமைப்படுத்திய சச்சினுக்கு மரியாதை செலுத்துவோம் என்ற உற்சாகமான கருத்துகளுடன் முழுமையான எனர்ஜியுடன் துடிப்பான இசை வீடியோ வெளியாகியுள்ளது. இது பரபரப்பாக பேசப்பட்ட ஒய் திஸ் கொலவெறிக்கு அடுத்த தனுஷின் இரண்டாவது வீடியோ ஆகும்.  மாஸ்டர் பிளாஸ்டர் யுஆர் அவர் பூஸ்ட் என்ற தொடங்கி தொடரும் அந்த துடிப்பான பாடல் ஐதராபாத்தில் பல இடங்களில் படமாக்கப்பட்டது. கொலவெறி டி பாடலுக்காக பாடுபட்ட அதே குழு இந்த வீடியோவையும் தயாரித்துள்ளது, என்று கிளாஸ்கோ ஸ்மித்க்ளையும் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த பாடல் குறித்து நடிகர் தனுஷ் கூறுகையில், கிரிக்கெட் என்றால் எனக்கு உயிர், சச்சினின் ரசிகன் நான் விளையாட்டுக்காக அவரது அர்ப்பணிப்பை எப்போதுமே நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் விளையாடுவதை பார்ப்பது வியப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்