முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உறவினர் போல் நடித்து நகைகளை திருடிய மர்ம ஆசாமி பிடிபட்டான்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,பிப். - 5 - மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உறவினர் போல் நடித்து நகைகளை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 61 பவன் நகையை பறிமுதல் செய்தனர்.  மதுரை மாநகரிலும், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் வயதான ஆண்களையும், பெண்களையும் உங்களுடைய மகன் மோதிரம், செயின் ஆர்டர் கொடுத்திருக்கிறார். அதை அளவு பார்க்க வேண்டும். அளவு கொடுங்கள் என்று கூறி மோதிரங்களையும், செயின்களையும் திருடிச்சென்றுள்ளார்.மேலும் உறவினர் போல் நடித்தும் பல இடங்களில் நகைகளை திருடி சென்றுள்ளார். இவ்வாறு மதுரை பகுதிகளில் 26 இடங்களில் திருடிய விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த சீட்டிங் பாண்டி என்ற பாண்டி என்பவரை பிடிக்க, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் உத்தரவின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆலோசனையின்படியும், உதவி ஆணையர் கலைமோகன் அறிவுரையின் பேரிலும் தெற்கு வாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.மலைச்சாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தது. அப்போது கடந்த 4ம் தேதி காலை 8 மணி அளவில் திருடிய மோதிரங்களுடன் பாண்டியை போலீசார் வளைத்து பிடித்தனர்.   பாண்டிக்கு ஆண்டிப்பட்டி, சங்கரன்கோவில், மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. அவரிடம் இருந்து 26 வழக்குகளின் கீழ் சுமார் 12 லட்சம் மதிப்புள்ள 61 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன. பாண்டி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.    இது குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் கூறும் போது, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறைக்கு உதவும் வகையில் சந்தேகம்படும்படியான நபர் யாரேனும் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்