முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டி அருகே வனவியல் கல்லுாரியில் இளைஞர்களுக்கான பயிற்சி முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

ஆண்டிபட்டி பிப் - 4 - ஆண்டிபட்டி அருகே உள்ள வனவியல் கல்லுாரியில் கிராமப்புற இளைஞர்களுக்கான மரம் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் முகாம் நடைபெற்றது, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வனவியல் கல்லுாரியில் துறை சார்ந்த பல மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் வனவியல் விரிவாக்க மையம் தேனி சார்பாக கிராமப்புற படித்த வேலையற்ற மாணவர்களுக்கான மரம் வளர்ப்பு தொழில்நுட்ப கருத்தரங்கு முகாம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது, முதல் நாள் முகாமில் மதுரை காமராஜ் பல்கலைகழக பேராசியரியர்கள் தர்மராஜ் சவுந்திரபாண்டியன், ஓய்வு ரேஞ்சர் இன்பசேகரன், கண்மாய்கள் சங்க தலைவர் காளிவேல் ஆகியோர் மரம் வளர்ப்பு குறித்து விளக்கி பேசினார்கள். வனச்சரக அலுவலர் கூடல்சாமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முகாமில் தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத்திட்டம், தரமான நாற்றாங்கால் உற்பத்தி செய்தல், பூமி வெப்பமயமாதல் காரணவிளக்கம், உயிர் உரங்கள் தயாரிக்கும் பயிற்சி குறித்து இளைஞர்களுக்கு விளக்கப்பட்டது, பின்னர் வனவியல் விரிவாக்க மையம் சார்பாக பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்