முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிலீக்ஸ் விவகாரம் - கேபினட் கமிட்டி விவாதம்

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.19 ​- காங்கிரஸ் அரசு வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள விவகாரம் குறித்து அரசியல் விவகாரத்திற்கான மத்திய கேபினட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த இடதுசாரி கட்சிகள்,அப்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றன. இதனையொட்டி மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டுப்போட எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் சார்பாக ரூபாய் கொடுக்கப்பட்டது என்று அமெரிக்காவில் உள்ள விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடந்த 2 நாட்களாக ஒரே அமளியாக இருக்கிறது. இந்தநிலையில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அரசியல் விவகாரத்திற்கான மத்திய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறித்து விரிவான முறையில் விவாதிக்கப்பட்டது. ஜாட் இன மக்களுக்கு இடஒதுக்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால் இது விஷயமாக முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. உத்திரப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் ஜாட் இன மக்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். மத்திய அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் டெல்லி-லக்னோ இடையே ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்