முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் ஆக வேண்டும் என்பது ராகுலின் கொள்கை அல்ல - பிரியங்கா

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

ரேபரேலி. பிப்.- 6 - பிரதமர் ஆக வேண்டும் என்பது ராகுலின் கொள்கை அல்ல என்று அவரது  சகோதரி பிரியங்கா  காந்தி கூறியுள்ளார். உத்தர பிரதேச தேர்தலில்  காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக 5 நாள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ல ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி நேற்று தனது 3 வது நாள் தேர்தல் பிரச்சாரத்தை  மேற்கொண்டார். பிறகு அவர் ரே பரேலி நகரில் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ராகுல் காந்தியின் கொள்கையில் இந்த நாட்டிந்  பிரதமராக தான் ஆக வேண்டும் என்பது மைய நோக்கமாக கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் இப்போது நமக்கு நல்ல திறமையான கண்ணியமான பிரதமர் இருக்கிறார்.  அவர் நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். என்வே இப்போதைக்கு ராகுல் பிரதமராக வேண்டும் என்பது முக்கிய நோக்கமல்ல என்றார். அடுத்த பிரதமராக ராகுல் காந்திதான் வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அவ்வபோது கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.  இந்த கருத்தின் அடிப்படையில் ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு இதுதான் சரியான தருணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு  பிரியங்கா  மேற்கண்ட பதிலை தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு தனது சகோதரர் ராகுல் காந்தி  அரும்பாடு பட்டு வருகிறார் என்றும் உத்தர பிரதேச தேர்தல் முடிவுகளை பற்றி கவலைப்படாமல் அவர் தேர்தல் பணிகளை ஆற்றி வருகிறார் என்றும்  பிரியங்கா கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு பின்புலமாக இருந்து செயல்படவே ராகுல் விரும்புகிறார். மற்றபடி முன்னணி நிலையில் இருந்து செயல்பட அவர் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த 2007 உ.பி. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு உ.பி.யில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக பலமாக இல்லை என்றும் இருந்தாலும் இந்த உ.பி.மாநில காங்கிரஸ் கட்சியை தான் எடுத்து நிறுத்தி  பலப்படுத்தவே விரும்புவதாக  ராகுல் கூறியிருந்தார். அதன்படிதான் அவர் இப்போது உ.பி.யில் பிரச்சாரம் செய்து வருகிறார் என்றும் அவர் கூறினார். தனக்கு மதிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல உ.பி.யில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே ராகுல் பணியாற்றி வருகிறார் என்றும் பிரியங்கா கூறினார்.

உ.பி. மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே தனது சகோதரர் பாடுபட்டு வருகிறார் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக  வேண்டும் என்றோ அல்லது பிரதமர் ஆக வேண்டும் என்றோ அவர் ஆசைப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்