முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை முடிவடைகிறது

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, பிப்.- 6 - உத்தர பிரதேசத்தில் வருகிற 8ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு  வருகிற 8 ம் தேதி தொடங்கி மார்ச் 3 ம் தேதி முடிய 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும்  பகுஜன் சமாஜ் , சமாஜ்வாடி, காங்கிரஸ் , பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின்  தலைவர்களும்   தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் வருகிற 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் கடந்த 22 ஆண்டுகளாக காங்கிரஸ் அல்லாத ஆட்சிகளே நடைபெற்று வந்துள்ளன. அதனால் இந்த தேர்தலில் எப்படியும்  காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி விட வேண்டும்  என்ற குறிக்கோளுடன் காங்கிரஸ் தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக சோனியா காந்தியின் மகனும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான ராகுல் காந்தி அவரது சகோதரி பிரியங்கா  காந்தி ஆகியோர் தீவிர ஓட்டு வேட்டையில் குதித்துள்ளனர். இதே போல மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உ.பி.முதல்வர் மாயாவதி தனது பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும்  இந்த தேர்தலில் முனைப்போடு பிரச்சாரம்  செய்து வருகிறது. பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி,  மூத்த  தலைவர்களான எல்.கே. அத்வானி, உமாபாரதி  போன்ற  தலைவர்களும்  தங்களது வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள்  இருக்கும் நிலையில்  உ.பி. தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்