முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிணமுல் காங்கிரஸ் கட்சியிடம் மேலும் அவகாசம் கேட்டுள்ளது காங்கிரஸ்

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.- 20 - மேற்கு வங்க மாநிலத்தில் தொகுதி பங்கீடு குறித்து  முடிவெடுக்க மேலும் சிறிது கால அவகாசத்தை திரிணமுல் காங்கிரஸ் கட்சியிடம் காங்கிரஸ் கட்சி கோரியிருக்கிறது. மேற்கு வங்காள மாநில சட்டசபையின் 294 தொகுதிகளுக்கு மார்ச், எப்ரல் மாதங்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் இடது சாரி கட்சிகள் ஓரணியாகவும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் போட்டியிட தீர்மானித்துள்ளன. இந்த தேர்தலில் தங்களுக்கு 3 இல் 1 பங்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த தொகுதி பங்கீடு தொடர்பாக இவ்விரு கட்சிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.

கடந்த2 நாட்களுக்கு கொல்கத்தாவில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய ரயில்வே துறை அமைச்சருமான மம்தா பானர்ஜி வீட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி பேச்சு நடத்தினார்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு 68 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று திரிணமுல் காங்கிரஸ் திட்டவட்டமாக கூறிவிட்டது.

இதனால் காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது.

இந்த நிலையில் 220 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர்கள் பட்டியலை திரிணமுல் காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் தன்னிச்சையாக அறிவித்தது.

இதனால் காங்கிரஸ் கட்சி கடும் கோபம் அடைந்துள்ளது.

என்றாலும் தங்களது முடிவை அறிவிக்க மேலும் சிறிது கால ஆவகாசம் தேவைப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ஷகீல் அகமது செய்தியாளர்களிடம் பேசுகையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை. என்றாலும் இது குறித்து நாங்கள் மீண்டும் பேச்சு நடத்த இருக்கிறோம்.  இதற்காக மேலும் சிறிது காலம் அவகாசத்தை கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்