முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது: வெங்கையா

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, பிப்.7 - அலைக்கற்றை ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார். டெல்லி மாநகராட்சி தேர்தலையொட்டி பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வெங்கையா நாயுடு பேசியதாவது, நாட்டையே உலுக்கிய 2 ஜி அலைக்கற்றை ஊழலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒதுக்கப்பட்ட 122 அலைக்கற்றை உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதனால் இந்த முறைகேட்டுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவை பதவி விலக வேண்டும். நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்திய இந்த ஊழலுக்கு காங்கிரஸ்தான் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 

55 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் வறுமை ஒழிந்தபாடில்லை. அதனால்தான் பூர்வாஞ்சல் மக்கள் வேலை தேடி தலைநகருக்கு வர வேண்டியதுள்ளது. டெல்லிக்கும், மும்பைக்கும் மக்கள் இடம்பெயர்ந்து செல்வதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள். ஏழைகள் மிகவும் ஏழைகளாகி வருகின்றனர். பணக்காரர்களுக்கு காட்டும் சலுகை ஏழைகளுக்கு காட்டப்படுவதில்லை. காங்கிரஸ் ஆட்சியில் காமன்வெல்த் ஊழல், 2 ஜி அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஒதுக்கீட்டு ஊழல் என ஊழல் நிறைந்துள்ளது. வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் தான் தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டது. கிராமங்கள்தோறும் சாலைகள் போடப்பட்டது. ஏழை, எளியோரும் செல்போன் பயன்படுத்தும் நிலை உருவானது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்