முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா பிரச்சினை: அமைதி வழியில் தீர்வு காண விருப்பம்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், பிப்.7 ​- சிரியாவில் நிலவி வரும் உள்நாட்டு பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அரபு லீக்கின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட சிரியா தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவளித்ததாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான ஹர்தீப்சிங்புரி தெரிவித்ததாவது, 

அமைதி முயற்சிகள் சிரியா தலைமையிலேயே எடுக்கப்பட வேண்டும். தங்கள் நாட்டு தலைமை குறித்து சிரியா மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற அனைத்து எதிர்க்கட்சிகளும் அமைதியான முறையில் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். இது அமைதி நிலவுவதற்கான புதிய சூழ்நிலை உருவாக்குவதுடன் அரசியல் ரீதியான முயற்சிகளுக்கும் உதவும். சிரியாவின் தலைமையினால் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த அரசியல் சீர்திருத்தங்களை அடைய இந்த அரசியல் ரீதியான முயற்சிகள் உதவும். அனைத்து தரப்பினரும் விரும்பும்படியான தேவையான மாற்றங்களை உருவாக்கவும் இது உதவும் என்றார். முன்னதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சிரியா அரசும், ஆயுதமேந்திய புரட்சி குழுக்களும் வன்முறையை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ரஷ்யாவும், சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்தன. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, மொராக்கோ உள்ளிட்ட நாடுகள் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்