முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சிக்கு வந்த பெண்ணுடன் உறவு கொண்ட கென்னடி

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

லண்டன், பிப்.8 - வெள்ளை மாளிகையில் உள்ள பத்திரிகை தொடர்பு அலுவலகத்தில் பயிற்சிக்காக வந்த இளம் பெண்ணுடன் அமெரிக்காவின் மறைந்த அதிபர் ஜான் எப். கென்னடி உறவு கொண்டது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ஜான் எப் கென்னடி. இவர் அதிபராக இருந்த காலத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது. கென்னடிக்கும் நேருவுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நெருங்கிய உறவு இருந்தது. கென்னடி அதிபராக இருந்தபோது வெள்ளைமாளிகையில் உள்ள பத்திரிகை தொடர்பு அலுவலகத்திற்கு மிமி ஆல்போர்ட் என்ற இளம் பெண் பயிற்சிக்காக வந்தார். அப்போது இவருக்கு வயது 19. பார்க்க அழகாக இருப்பாராம். அவர் மீது அதிபர் ஜான் எப் கென்னடி ஆசை கொண்டாராம். இவரே வழியே சென்று மிமியுடன் பேச்சுக்கொடுப்பாராம். ஒரு நாள் மிமியை அழைத்துக்கொண்டு வெள்ளைமாளிகையை கென்னடி சுற்றிக்காட்டினாராம். பின்னர் தனது மனைவி அறைக்கு மிமியை அழைத்து சென்று படுக்கையில் உட்கார செய்தாராம். மிமியும் வேறு வழியில்லாமல் படுக்கையில் உட்கார்ந்தாராம். ஜான் எப்.கென்னடியோ இதை பயன்படுத்திக்கொண்டு மிமியுடன் நெருங்கியதோடு உறவு கொண்டாராம் என்று மிமி தாம் எழுதி வரும் புத்தகத்தில் கூறியுள்ளாராம். அதோடு மட்டுமல்லாது தனது நெருங்கிய நண்பரான டேவ் பவர்ஸ் என்பவருடனும் உறவு கொள்ளுமாறு கென்னடி கேட்டுக்கொண்டாராம். மிமிக்கும் அப்போது வயது 19 என்பதால் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டதாகவும் அந்த புத்தகத்தில் கூறியுள்ளார். கென்னடி உயர்ந்த பதவியில் இருப்பதாலும் அவருடன் உறவு கொள்ளுவதை தவிர்க்க முடியவில்லை என்றும் அந்த புத்தகத்தில் மிமி கூறியுள்ளார். மிமிக்கு தற்போது 69 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony