முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்ட பேரவை தேர்தacலுக்கான மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 20 - தமிழக சட்ட பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனுத்தாக்கலுக்கான கடைசி நாள் வரும் 26-ம் தேதியாகும். தி.மு.க. பொதுச் செயலாளரும், நிதி அமைச்சருமான அன்பழகன் முதல் நாளான நேற்று (19-ந் தேதி) சென்னையில் மனுத்தாக்கல் செய்தார். இதுகுறித்த விபரம் வருமாறு:-    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தொடங்கி மே மாதம் 10-ந்தேதி 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.   அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 4, 11​ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். அந்த மாநிலத்தில் ஏற்கனவே மனு தாக்கல் தொடங்கிவிட்டது. 

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் ஏப்ரல் 13​ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் நேற்று (சனிக்கிழமை) வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.   மனு தாக்கல் தொடங்கப்படுவதை தலைமை தேர்தல் கமிஷன் இன்று காலை அதிகாரப்nullர்வமாக அறிவிக்கை வெளியிட்டது. தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது. தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட நேற்று மதியம் 12.50 மணி அளவில் மனு தாக்கல் செய்தார். எழும்nullர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள சிப்காட் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சம்பத்குமாரிடம் அவர் மனு கொடுத்தார்.

சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.மகேஷ் குமார் நேற்று காலை சைதாப் பேட்டையில் உள்ள மாநகராட்சி 9​வது மண்டல அதிகாரியும், தேர்தல் அதிகாரியுமான பன்னீர்செல்வத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்ய 26​ந்தேதி கடைசி நாளாகும். 28​ந்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.   மனுக்களை வாபஸ் பெற 30​ந்தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் முழுவிவரம் வெளியிடப்படும். அதன் பிறகு பிரசாரம் உச்சக் கட்டத்தை எட்டும். வேட்பு மனு தாக்கலுக்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று பவுர்ணமி என்பதால் ஏராளமானவர்கள் மனு தாக்கல் செய்தனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் மனு தாக்கல் கிடையாது. 24-​ந்தேதி மனு தாக்கல் விறுவிறுப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மனுக்கள் வாங்கப்படும் அலுவலகத்துக்கு வேட்பாளர்கள் கோஷம் போட்டப்படி நிறைய பேருடன் வரக் கூடாது. மனு தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு வேட்பாளர் அவரது ஆதரவாளர்களும் 3 கார்களில் மட்டுமே வரலாம். மனு தாக்கல் செய்யப்படும் போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் பெயர் எப்படி உள்ளதோ, அதே மாதிரிதான் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.   தேர்தல் கமிஷனின் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள் தலா 5 பேருடன் மட்டுமே வந்தனர். யாரும் கோஷம் போடவில்லை. இதனால் தேர்தல் அலுவலகங்களில் ஆரவாரம் எதையும் முன்பு போல பார்க்க முடிய வில்லை. வி.ஐ.பி. அந்தஸ்து வேட்பாளர்கள் கூட அமைதியாக வந்து மனு செய்து விட்டுச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்