முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொய்யான வாக்குறுதி: முஸ்லீம்களுக்கு பா.ஜ. எச்சரிக்கை

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

அலகாபாத்,பிப்.9 - பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து காங்கிரஸ் கட்சி ஏமாற்றப்பார்க்கிறது. ஆகவே அந்த கட்சியிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று முஸ்லீம் சமுதாயத்தினர்களை பாரதிய ஜனதா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதீன் கட்காரி அலாகாபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காங்கிரசிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் முஸ்லீம்களை கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பாபர் மசூதியை பாதுகாப்பதாக காங்கிரஸ் பொய்யான வாக்குறுதி கொடுக்கிறது. இதன் மூலம் முஸ்லீம்களையும் கவரப்பார்க்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் இது வெறும் ஓட்டு அரசியல்தான். முஸ்லீம்களின் வளர்ச்சி பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய அந்த இடம் ராமர் கோயிலுக்கு சொந்தமானது என்று அலகாபாத் ஐகோர்ட்டு ஏற்கனவே தீர்ப்புக்கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஆனால் சிலர் இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டுக்கு போய் இருக்கிறார்கள். நாங்கள் அதன் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். உண்மை இப்படி இருக்க காங்கிரஸ் கட்சி ஓட்டுவங்கி அரசியல் நடத்துகிறது. பாபர் மசூதியை பாதுகாப்பதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து முஸ்லீம்களை கவரப்பார்க்கிறது. எனவே இந்த விஷயத்தில் முஸ்லீம் சமுதாயத்தினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முஸ்லீம் சமுதாயத்தினரின் உண்மையான தேவைகளை காங்கிரஸ் புறக்கணிக்கிறது. அந்த சமுதாயம் வறுமையில் வாடுகிறது. ஆனால் பொருளாதார முன்னேற்றத்தின் பலன்களை அவர்களால் அறுவடை செய்ய முடியவில்லை. காரணம் காங்கிரஸ் கட்சி ஓட்டுவங்கி அரசியல் நடத்துகிறது. முஸ்லீம்களுக்கு நவீன கல்வி தரப்படுவதில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வக்போர்டு வாரிய சொத்துக்கள் பயனற்று கிடக்கிறது. அந்த நிலத்தில் எல்லாம் தொழில்நுட்ப மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் இதுவரை பதில் இல்லை. இந்த அரசு செயலற்று கிடக்கிறது. இவ்வாறு மத்திய அரசையும் காங்கிரசையும் கடுமையாக சாடினார் கட்காரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago