முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. அமைச்சருக்கு லோக் ஆயுக்தா கோர்ட்டு சம்மன்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2012      ஊழல்
Image Unavailable

 

லக்னோ.பிப்.9 - தனியார் கம்பெனி ஒன்றுக்கு முறைகேடாக மது உரிமம் வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் வருகிற 19 ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உ.பி. கலால் துறை அமைச்சருக்கு அம்மாநில லோக் ஆயுக்தா கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. உத்தர பிரதேச கலால் துறை அமைச்சராக இருப்பவர் நசீமுதீன் சித்திக்கி. தனியார் கம்பெனி ஒன்றுக்கு மதுபான விற்பனைக்காக லைசென்ஸ் வழங்கப்பட்டதில் பல கோடி ரூபாய்க்கு முறைகேடுகள்  நடந்துள்ளதாகவும் இந்த முறைகேட்டில் கலால் துறை அமைச்சர் நசீமுதீன் சித்திக்கும் அரசு உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் எனறும் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி உ.பி. மாநில லோக் ஆயுக்தா கோர்ட்டில் அலகாபாத்தை சேர்ந்த வினய் மிஸ்ரா என்பவர் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா நீதிபதி ( ஓய்வு )  என்.கே மல்கோத்ரா  இந்த புகார் தொடர்பாக வருகிற 19 ம் தேதி லோக் ஆயுக்தா கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமைச்சர் நசீமுதீன் சித்திக்கிற்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். 

ப்ளூ வாட்டர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு  மதுபான விற்பனை லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த லைசென்சில் பல கோடி ரூபாய்க்கு  முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த லைசென்ஸ் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது.  எதற்காக வழங்கப்பட்டது என்பது குறித்த விளக்கங்களை தெரிவிக்குமாறு அமைச்சர் நசீமுதீனுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

கடந்த 2007 ம் ஆண்டு முதல்வர் மாயாவதி  தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றதற்கு பிறகு மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உ.பி.யில் மாநில மது பான விற்பனை மற்றும் வினியோக உரிமையை ( லைசென்ஸ் )  மாநில சர்க்கரை ஆலைகள் சம்மேளனத்திற்கு வழங்க வகை செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்த சம்மேளனமும் ப்ளூ வாட்டர்ஸ் என்ற தனியார் கம்பெனியும் இணைந்து  இந்த மது பான விற்பனை உரிமத்தை பெற்றன.

இந்த உரிமம் வழங்கப்பட்டதில்தான் பல கோடி ரூயாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலை சம்மேளனத்திற்கு வழங்க வேண்டிய உரிமத்தை ஒரு தனியார் கம்பெனியை கூட்டு சேர்த்து வழங்கியதாக அமைச்சர் சித்திக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்