முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைசிறுத்தைகள் வேட்பாளர் பட்டியல் திருமாவளவன் வெளியிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் - 20 - 10 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர்கள்  பட்டியலை சென்னையில் நேற்று கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். ரவிகுமார் எம்.எல்.ஏ காட்டுமன்னார் கோவில் தொகுதியில் மீண்டும் ரவிக்குமார் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கான  வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. 

அதன் விவரம் வருமாறு:- சீர்காழி- உஞ்ஞை அரசன், கள்ளக்குறிச்சி- பாவரசு, செய்யூர்- பாவேந்தன், சோழிங்கநல்லூர்- எஸ்.எஸ்.பாலாஜி, திட்டக்குடி- சிந்தனைசெல்வன், அரூர்- நந்தன், உத்தங்கரை- முனியம்மாள் கனியமுதன், காட்டுமன்னார் கோவில்- துர.ரவிக்குமார், அரக்கோணம்- செல்லப்பாண்டியன், உளுந்தூர்பேட்டை- முகமதுயூசப். இவர்களில் துரை.ரவிக்குமார் இப்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்