முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக்பாட்ஷா மர்ம சாவு:சி.பி.ஐ.யிடம்விரைவில் ஒப்படைப்போம்-கமிஷனர்

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை. மார்ச்.- 20 - ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசாவின் நெருங்கிய நண்பரும், கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவன இயக்குனருமான சாதிக் பாட்ஷாவின் மர்ம மரணம் குறித்து, உரிய ஆவணங்களை சி.பி.ஐயிடம் விரைவில் ஒப்படைக்க உள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா. இவர் கடந்த 16​ந் தேதி தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணியில் பல்வேறு மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. அவரது சாவில் மர்மம் nullநீடிக்கிறது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? அல்லது கட்டாய தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா? என்பது இதுதொடர்பாக விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

சாதிக் பாட்சா மரணம் தொடர்பாக முதல் கட்ட விசாரணையை சென்னை போலீசார் முடித்துவிட்டனர். சாதிக் பாட்சா மனைவி மற்றும் உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வாக்குமூல மாகவும் பதிவு செய்து வைத்துள்ளனர். 

சாதிக் பாட்சா தற்கொலை தொடர்பாக திரட்டி வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் அனைத்தையும் பைல் போட்டு வைத்துள்ள போலீசார் சி.பி.ஐ. வசம் அதனை ஒப்படைக்க தயார் நிலையில் உள்ளனர். இன்னும் ஒரு சில தினங்களில் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் இந்த பைல் ஒப்படைக்கப்பட உள்ளது.   

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சாதிக் பாட்சா 2 செல்போன்களை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிய 16​ந் தேதி நள்ளிரவு இந்த 2 செல்போன்களும் போலீசார் வசம் வந்தது. 

சாதிக் பாட்சாவின் உறவினர்கள் அதனை ஒப்படைத்தனர். இந்த செல்போன்களில் சாதிக் பாட்சா யார் யாரிடம் பேசினார்? அவரை தொடர்பு கொண்டு பேசியவர்கள் யார்? என்பது பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:-

சாதிக் பாட்சா கொலை வழக்கு தொடர்பாக உதவி கமிஷனர் தலைமையில் விசாரணை  நடைபெற்று வருகிறது.

அவர் தற்கொலை செய்த அறையிலிருந்து ஒரே ஒரு கடிதம் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணையை பொறுத்தவரையில் தமிழக அரசு முறையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதும். அதன் பின்னர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகள் அதனை ஏற்றுக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிடுவார்கள். அதன்பிறகு சென்னையிலுள்ள சி.பி.ஐ அதிகாரிகள் தொடர்பு கொள்வார்கள். வழக்கு தொடர்பான சி.டி பைல் விரைவில் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு கமிஷனர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்