முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு எதிராக கைது வாரண்ட்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

மாலே, பிப். 11 - மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை மாலத்தீவு குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆதம் காபூர் தெரிவித்தார். எனினும் இது குறித்து எந்த உத்தரவும் இது வரை கிடைக்கப்பெறவில்லை என மாலத்தீவு தலைமை போலீஸ் அதிகாரி அப்துல்லா ரியாஸ் தெரிவித்தார். இந்த நிலையில் நஷீத் கூறியதாவது, எனக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் முன்னாள் அதிபரை சிறையில் அடைப்பது இதுவே முதல் முறையாகும். சர்வதேச அமைப்பு இந்நிலையை கருத்தில் கொண்டு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

நஷீத் பதவி விலகியதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சியை கட்டுப்படுத்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் முகமது வாஹித் ஹசன், உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்களை நியமித்துள்ளார். தலைநகர் மாலேயில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நஷீத் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறப்பட்டது. இதுவரை சுமார் 20 போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் தாக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் முகமது ஷமீல் தெரிவித்தார். 

பாதுகாப்பு காரணங்களுக்காக நஷீத் மனைவி மற்றும் மகள்கள் இலங்கைக்கு தப்பி சென்றுள்ளனர். அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் போனில் பேசியதாகவும், ராஜபக்சே அவர்களிடம் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே நஷீத் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பேசுகையில், நஷீத் மனைவி, மகள்கள் இலங்கையில் இருப்பதை உறுதி செய்ததோடு மூவருக்கும் பத்திரமான இடம் இலங்கைதான் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்