முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை :இந்தியா - மே.இ.தீவு அணிகள் சேப்பாக்கத்தில் இன்று மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். - 20 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று நடக் க இருக்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவு அணிகள் மோத இருக்கின்றன.  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு 4 ஆட்டம் ஒதுக்கப்பட்டது. கடந்த மாதம் 30 ம் தேதி நடந்த முதல் ஆட்டத்தில், நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் கென்யாவையும், 6 -ம் தேதி நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலா ந்து 6 ரன்னில் தென் ஆப்பிரிக்காவையும் தோற்கடித்தது. கடந்த 17 -ம் தேதி நடந்த மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்று ம் மே.இ.தீவு அணிகள் இங்கு மோதின. இறுதியில், இங்கிலாந்து 18 ரன்னில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை தோற்கடித்தது. 

இதனைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்தில் 4 -வது ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் பி பிரிவைச் சேர்ந்த இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி உல கக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டமாகும். 

இந்திய அணி இதுவரை 5 ஆட்டத்தில் விளையாடி, 3 - ல் வெற்றியும், ஒரு டை, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது. துவக்க ஆட்டத்தில் 87 ரன்னில் வங்காளதேசத்தை வென்றது. இங்கிலாந்துட ன் மோதிய ஆட்டம் டை ஆனது.  

அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக் கெட்டில் தோல்வியைத் தழுவியது. 

இந்திய அணி இதுவரை சாதாரணமான அணிகளை தான் வென்று உள்ளது. மிகப் பெரிய அணியை வீழ்த்தவில்லை. இதனால் இந்திய அணி மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி வெற்றியை பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 

மே.இ.தீவு அணியை வீழ்த்தினால் தான் கால் இறுதியில் நெருக்கடி இல்லாமல் ஆட முடியும். இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படலாம். வேகப் பந்து வீச்சாளர் நெக்ராவுக்கு பதி லாக தமிழகத்தைச் சேர்ந்த சுழற் பந்து வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. 

உத்தரபிரதேச வீரரான ரெய்னாவின் நிலை உறுதியாக தெரியவில் லை. விராட் கோக்லி அல்லது யூசுப் பதான் கழற்றி விடப்பட்டால் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். 

பேட்டிங்கில் டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங், காம்பீர், ஆகி யோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் தோனி பேட்டிங் வரிசை யை மாற்றியதால் கோக்லியும், யூசுப் பதானும் கடந்த சில ஆட்டங் களில் சொதப்பினர். 

கோக்லி 4 -வது வரிசையிலும், யூசுப் பதான் 6 அல்லது 7 - வது வரிசை யிலும் ஆடுவதே நல்லது. பேட்டிங் பவர் பிளேயை சரியாக பயன்படு த்திக் கொள்ள வேண்டும். பந்து வீச்சு , பீல்டிங்கில் முன்னேற்றம் தேவை. 

ஜாஹிர்கானோடு, ஹர்பஜன் சிங் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். மேற்கு இந்தியத் தீவு அணியை வீழ்த்த இந்திய வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆட வேண்டும். 

மேற்கு இந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரை, இதுவரை 5 ஆட்டத்தில் ஆடி, 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி சிறிய அணிகளான அயர்லாந்து, நெதர்லாந்து, வங்காளதேச அணிகளை தோற்கடித்தது. 

ஆனால் பெரிய அணிகளான இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது. இதில் இங்கிலாந்து அணியிடம் தோற்றதை தான் ஜீரணிக்க முடியவில்லை. 3 ரன்னில் கடைசி 4 விக்கெட் விழுந்ததால் 18 ரன்னில் தோற்றது. 

மே.இ.தீவு அணியில் கிறிஸ் கெய்ல்ஸ், டேவேன் ஸ்மித், டாரன் பிரா வோ, பொல்லார்டு போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ரோச், சுலைமான் பென் போன்ற சிறந்த பெளலர்களும் உள்ளனர். 

இந்திய அணியை வீழ்த்த மே.இ.தீவு வீரர்கள் கடுமையாக போராடு வார்கள். கடைசி லீக் ஆட்டம் என்பதால் இரு அணிகளும் அதற்கு ஏற்றவாறு விளையாடும்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்