முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவில் 29,000 இந்தியார்கள் பத்திரமாக உள்ளனர்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

மாலே. பிப்.12 - ஆட்சி மாற்றம் காரணமாக கலவரம் நடந்து வரும் மாலத்தீவில் உள்ள 29,000 இந்தியர்களும் பத்திரமாக உள்ளனர் என்று அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்காசிய நாடுகளில் ஒன்றான மாலத்தீவில் அதிபர் முகம்மது ரசீத் பதவி விலகியதை அடுத்து அந்நாடடின் அதிபராக துணை அதிபர் பொறுப்பேற்றார்.  மாலத்தீவில்  அரசியல் நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக ரசீத்  தனது அதிபர் பதவியை விட்டு கீழே இறங்கினார்.

நாடு முழுவதும் ராணுவத்தினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாலத்தீவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து இருக்கிறது.  பதவியை ராஜினமா செய்த அதிபர் ரசீத்திற்கு ஆதரவாகவும் பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும் கலவரம் ஏற்பட்டுள்லது.

வெப்ப நாடுகளின் சொர்க்க பூமி என்று  அழைக்கப்படும் மாலத்தீவின் மொத்த ஜனத்தொகையே 3 லட்சம்தான்.

இந்த குட்டி தீவு நாட்டில் 29,000 இந்தியார்கள் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள்தான் அதிகம். மேலும் இந்தியா டாக்டர்களும் பெருவாரியாக உள்ளனர்.

தலைநகர் மாலேயில் மட்டும் 22,000 இந்தியார்கள் உள்ளனர். 

ஒரு பக்கம் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தாலும் கூட இங்குள்ள இந்தியார்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துளளனர்.

இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அப்போதைக்கு அப்போது தகவல்கள் கேட்டறியப்பட்டு வருவதாக  அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony