முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை :தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி வங்கதேச அணியை பந்தாடியது

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மிர்பூர், மார்ச். - 20 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிர்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 206 ரன் வித்தியாசத்தில் வங்கதே ச அணியை வீழ்த்தி முன்னிலை  பெற்று உள்ளது. முக்கியமான இந்தப் போட்டியில் வங்கதேச அணி மோசமான தோல் வியை தழுவியதால் அந்த அணி காலிறுதி வாய்ப்பை இழந்து விட்ட து. இந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு அதிகரித்துள்ளது.  இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில், அம்லா, காலி ஸ், மற்றும் டுபிளீசஸ் ஆகியோர் நன்கு ஆடி அரை சதம் அடித்து அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினர். கேப்டன் ஸ்மித் அவர்களு க்கு பக்கபலமாக ஆடினார். 

பின்பு பெளலிங்கின்  போது, வேகப் பந்து வீச்சாளர் சாட்சோபே மற் றும் சுழற் பந்து வீச்சாளர் பீட்டர்சன் இருவரும் இணைந்து அபாரமாக பந்து வீசி வங்கதேச அணியின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினர். போத்தா மற்றும் இம்ரான் டாகிர் இருவரும் மேற்படி வீரர்களுக்கு ஆதரவாக பந்து வீசினர். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 39 -வது லீக் ஆட்டம் மிர் பூரில் உள்ள ஷெரே பங்க்ளா தேசிய அரங்கத்தில் நடந்தது. இதில் குரூ ப் பி பிரிவைச் சேர்ந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில், அம்லா மற்றும் கேப்டன் ஸ்மித் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

தென் ஆப்பிரிக்கா அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 284 ரன்னைக் குவித்தது. அந்த அணி சார்பில், 3 வீரர்கள் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித்தனர். 

ஆல்ரவுண்டர் காலிஸ் அதிகபட்சமாக 76 பந்தில் 69 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் ஷாகிப் அல் ஹசன் வீசிய சுழலில் சிக்கி அவரிடமே கேட்ச் கொடுத்து வெளி யேறினார். 

அடுத்தபடியாக, டு பிளீசஸ் 52 பந்தில் 52 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். துவக்க வீரர் அம்லா 59 பந்தில் 51 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். தவிர, கேப்டன் ஸ்மித் 68 பந்தில் 45 ரன்னையும், பீட்டர்சன் 22 ரன்னையும், டுமினி 17 ரன் னையும் எடுத்தனர். 

வங்கதேச அணி தரப்பில், ரூபெல் ஹொசைன் 56 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ஷாகிப் அல் ஹசன் 46 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, அப்துர் ரசாக் மற்றும் மக்மதுல்லா ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

வங்கதேச அணி 285 ரன்னை எடுத்தால் வெற்றி  பெறலாம் என்ற இல க்கை தென் ஆப்பிரிக்கா வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 28 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 78 ரன்னில் சுருண்டது. 

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி இந்த லீக் போட்டியில் 206 ரன் வித் தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 வெற்றிப் புள்ளிகள் கிடைத்தது. 

வங்கதேச அணி சார்பில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அதிகபட்சமா க, 49 பந்தில் 30 ரன்னை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஓரிலக் க எண்ணிலேயே ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி தோல்வி யைத் தழுவியது. 

தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப் பந்து வீச்சாளர் சாட்சோபே 14 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பீட்டர்சன் 12 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். போத்தா மற்றும் இம்ரான் டாகிர் ஆகி யோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாய கனாக சாட்சோபே தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்