முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவுநீர் தொட்டிகள் சுத்தகரிப்பு பயிற்சி முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.11 - சென்னையில் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் மூலம் நேற்று கழிவுநீர் தொட்டிகள் சுத்திகரிப்பு பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இந்த பயிற்சி முகாமில் அமைச்சர் ரமணா பங்கேற்றார் இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் டி.எஸ். சீனிவாச முர்த்தி, இந்த விழாவின் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழக முதல்வரின் அறிவுரையின் பேரில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சுத்தப்படுத்தும் போது வெளிப்படும் நச்சு வாயுக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக,  சுற்றுச்சூழல் அமைச்சரால் 2011​-12 ஆம் ஆண்டிற்கான சட்டசபை அறிவிப்புகளில் இதுகுறித்தான உரிய பயிற்சிகளை அளிப்பதற்கு ரூ. 25.0 இலட்சங்கள் செலவிடுவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.   

முதல் பயிற்சி முகாமினை சுற்றுச்சூழல் அமைச்சர்  பி.வி.ரமணா நேற்று (10.2.12) துவக்கி வைத்தார். ச.வி.சங்கர் (தலைவர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் முதன்மை செயலர், சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை) இந்த பயிற்சி குறித்து விவரங்களை எடுத்துரைத்தார்.  தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர்  மற்றும் கூடுதல் தலைமை செயலாளர்  இரா.பாலகிருஷ்ணன், இந்த பயிற்சியினை பற்றிய கருத்துகளை தெரிவித்தார்.   

இத்திட்டத்தின் விளக்க உரையை எஸ்.பாலாஜி, (கூடுதல் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்), நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

 மாநிலம் முழுவதும் 12 இடங்களில் ஒரு நாள் பயிற்சி முகாம் முதல் பயிற்சி சென்னையிலும் மற்றும் கடலூர், ஈரோடு, கரூர், மணலி, கோயம்புத்தூர், திண்டுக்கல், வேலூர், வாணியம்பாடி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருப்ர் ஆகிய இடங்களில் வரும் வாரங்களில் நடைபெற உள்ளது.  இந்த பயிற்சி முகாமில் தோல் தொழிற்சாலைகள், இரசாயனம், பெட்ரோலியம், சாயம் மற்றும் சலவை தொழிற்சாலைகள், உணவு மற்றும் ஜவ்வரிசி தொழிற்சாலைகள், பால் பொருட்கள், இறைச்சி கூடங்கள், மருந்து தொழிற்சாலைகள், உணவு விடுதிகள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களால் நடத்தப் பெறும் கழிவுர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள், மேலாளர்கள் மற்றும் அதன் பணியாளர்கள் என ஏறத்தாழ 5000 பேருக்கு பயிற்சி அளித்திட திட்டமிடப்பட்டுள்ளன என தெரிவத்தார்.    

தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களால் செயல்படுத்தி வரும் கழிவுர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பொது கழிவுர் சுத்திகரிப்பு நிலையங்களை சுத்தப்படுத்தும் போது, வெளியேறும் வாயுக்களால் குறிப்பாக சுத்திரிக்கப்படாத கழிவுர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் காற்றிலி சுத்திகரிப்பு தொட்டிகளிலிருந்து வெளிவரும் உறட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தான இந்த ஒரு நாள் பயிற்சி முகாம், 12 இடங்களில் நடைபெற உள்ளன.      

இப்பயிற்சி முகாம்களில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழிற்சாலைகள் ஆய்வக இயக்குநகரம், மத்திய தொழிலாளர்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு நிர்வாக இயக்குநரகம் மற்றும் பிற நிறுவனங்களிலுள்ள பயிற்றுநர்கள் மற்றும் இத்துறைகளின் வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளன.  மேலும், இப்பயிற்சிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் இணைந்து தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், கிண்டி ஆகியோர் செயல்பட உள்ளனர். 

இப்பயிற்சிகளின் போது கடைப்பிடைக்க வேண்டிய நடைமுறைகள், பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள், அணிய வேண்டிய பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சுத்தப்படுத்தும் பணிகளுக்கு முன்பாக கடைபிடிக்க வேண்டிய சோதனைகள் ஆகியவற்றினை விரிவாக எடுத்துரைத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளன.  இப்பயிற்சிக்குப்பின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பொது கழிவுர் சுத்திகரிப்பு நிலையங்களை சுத்தப்படுத்தும் போது ஏற்படும் உயரிழப்புகளை முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும் என்னும் நோக்கில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர்  தெரிவித்தார்.   சார்லஸ் ரோட்ரிக்ஸ், இணைத்தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் நன்றி உரை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago