முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்லவர் பிறந்தநாள் : சிறுபான்மை நலப்பிரிவு தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,பிப்.1 - முத்லவர் ஜெயலலிதாவின் 64 வது பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. நேற்று தலைமை கழகத்தில் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஏ.ஜஸ்டின் செல்வராஜன் கழக சிறுபான்மையினர் நலப் பரிவுத் தலைவர் தலைமை தாங்கினார். அ.அன்வர்ராஜா கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், சி.த.செல்லப்பாண்டியன் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் முன்னிலை வகித்தார். எஸ்.எம்.கே.முஹம்மது அலிஜின்னா தென் சென்னை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பரிவுச்செயலாளர் வரவேற்று பேசினார்.

கூட்டதில் இ.மதுசூதனன் கழக அவைத்தலைவர், சி.பொன்னையன் கழக மைப்புச் செயலாளர், டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் கழக அமைப்புச் செயலாளர், வி.பி.கலைராஜன் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் கருத்துரையில் வழங்கினார்.

நன்றியுரை: கவிஞர் வீரை கறீம் தென் சென்னை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கழகத்தின் நிரந்தரப்பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 64 வது பிறந்த நாளை ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவாக கொண்டாடவும், மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள், ஏழை மாணவர்களுக்கான உதவிகள், ஆதரவற்ற மக்களுக்கான பேருதவிகள் செய்தல் போன்ற அறப்பணிகள் செய்யும் விழாவாக சிறுபான்மையினர் நலப்பிரிவின் சார்பில் கொண்டாடுவது என ஒரு மனதாக தீர்மானக்கப்பட்டுவது.

ஜெயலலிதா தலைமையில் 2011 ஆம் ஆண்டு ஒரு நல்லாட்சி அமைந்த பிறகு சிறுபான்மை மக்களுக்கு தேவையான உதவிகளை முதல்வர் ஜெயலலிதா விரும்பி செய்திருக்கிறார்கள் என்பதை நாடே அறியும். வக்பு வாரியத்தை நிர்வகிப்பதற்கு வழக்கமாக வழங்கப்பட்டு வரும் 45 லட்ச ரூபாயிலிருந்து 1 கோடியாக உயர்த்தி வழங்க ஜெயலலிதா ஆணையிட்டார்கள். வக்பு வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படாமலே இருந்த ஓய்வூதிய பலன்கள் முழுவதையும் வழங்கிட தேவையான 3 கோடி ரூபாயை ஒரே நேரத்தில் வழங்கினார்கள். ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்பு வாரிய சொத்துக்களை மீட்க உத்தரவிட்டு விரைவான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்கள். ஹஜ் கமிட்டிக்கான நிர்வாக மானியத்தை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டார்கள். புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இவ்வாண்டில் 1400 கூடுதல் இடங்களை மத்திய அரசிடமிருந்து பெற்று, மொத்தம் 4000 பேர் ஹஜ் பயணம் சென்றுவர அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மனிதப்புனிதர் டாக்டர் எம்.ஜி.ஆரால்கொண்டுவரப்பட்டு இஸ்லாமிய சமுதாய மக்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் உலமாக்கள் பென்சன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வந்த 750 ரூபாயை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டார்கள். உலமாக்களுக்கு வில்லையில்லா மிதி வண்டிகள் வழங்க உத்தரவிட்டார்கள். இந்தக்கல்வி ஆண்டில் சிறுபா

ன்மை மக்களுக்கான 3 புதிய ஹாஸ்டல்கள் கட்டுவதற்கு உத்தரவிட்டார்கள். கிறிஸ்துவ பெருமக்கள் புனித ஸ்தலமான ஜெருசலம் சென்று வர அரசு உதவி செய்யும் என்று ஜெயலலிதா தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு முதல் தடவையாக 500 பேருக்கு தலா 20,000 ரூபாய் வழங்கி ஜெருசலம் சென்று வரும் புனித பயணம் மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். இவ்வாறு சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா சிறுபான்மை மக்களின் சார்பில் கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு மனம் கவர்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்.  

குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைவதற்கு மூலகாரணமாக இருந்து அரும்பணியாற்றிய தியாகி. மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் கட்ட உத்தரவிட்ட ஜெயலலிதா கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.

முல்லை பெரியார் அணையை கட்டித்தந்த தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெருந்தொண்டாற்றிய பென்னி குயிக்கின் நிகரில்லா தியாகத்தை நினைவு கூறும் வகையில் மணிமண்டபமும் திருவுறுவச்சிலையும் அமைக்கப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறுபான்மையினர் நலப்பிரிவு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.

உழைக்கும் ஏழையின் வியர்வை மறையும் முன்னர் உழைப்பிற்குரிய கூலியை வழங்கிட வேண்டும் என்று நபிகள் நாயகம் சொன்னதற்கிணங்க தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை விலையில்லா அரிசி, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், விலையில்லா மின்விசிறி, ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள், பள்ளிக்கூட மாணவர்களுக்கு மடிக்கணினி ஆகியவைகளை வழங்கிட முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டே உடனேயே உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தி வரும் பெரும்பான்மையான ஏழை,எளிய மகக்ளின் அன்பைப்பெற்றிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறுபான்மையினர் நலப்பிரிவு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் இனத்திற்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிந்த ராஜபக்சேவின் கொடுஞ்செயலைக்கண்டித்தும் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க ஐ.நா மன்றத்தை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழர்களின் மானம் காத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறுபான்மையினர் நலப்பிரிவு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

தமிழக மீனவர்களின் நலனைக்காப்பதில் டாக்டர் எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா தான் முழு மூச்சாக பாடுபட்டுவருகின்றார்கள். மீனவர்களுக்கான மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட காலங்களில் வழங்கும் ரப்சீசன் உதவியை 2000 ரூபாயிலிருந்து 4000 ரூபாயாக உயர்த்தியதற்கு தமிழக மீனவர்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதோடு கச்சத்தீவை மீட்காமல் ஓய மாட்டே என்று சூளுரைத்து செயல்பட்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறுபான்மையினர் நலப்பிரிவு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் ஜெயலலிதாவின் அரசு ஏழை மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அப்பழுக்கற்ற அரசாக விளங்கிக்கொண்டருக்கும் செய்திகளை எல்லாம் உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற கட்சிப்பணிகளை சிறுபான்மையினர் நலப்பிரிவு தொடர்ந்து தொய்வில்லாமல் ஆற்றுவது என்று ஒருமனதாக தூர்மானிக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்