முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

``பவானி ஐ.பி.எஸ்'' படவிமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

ஆந்திராவிலிருந்து திருநெல்வேலிக்கு மாற்றலாகி வருகிறார் ஐ.பி.எஸ். அதிகாரி சினேகா. திருநெல்வேலியில் நடக்கும் சாராய வியாபாரம், பெண்கள் கடத்தல், கற்பழிப்பு என பல கிரிமினல் வேலைகளை படு ஜோராக செய்கிறார் பெரிய மனிதர் சிவலிங்கம் (கோட்டா சீனிவசராவ்). இதை எதிர்க்கிறார் சினேகா. ஆனால் சினேகாவின் நடவடிக்கைகள் எல்லாம் அவருக்கு எதிராகவே அமைகிறது. இதற்கு காரணம், சிவலிங்கத்திற்கு உதவும் வேறு சில காவல்துறை அதிகாரிகளே! இதையெல்லாம் மீறி சினேகா சிவலிங்கத்தை அடக்க போராடுகிறார். அதில் சினேகா தண்டிக்கப்படுவதோடு அவரது வேலையும் பறி போகிறது. அதன் பிறகு அவர், சிவலிங்கத்தை எப்படி பழி வாங்குகிறார் என்பது மீதி படம்.

விஜயசாந்தி நடிப்பில் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்ற வைஜெயந்தி ஐ.பி.எஸ்.'தான் பவானி'யாக உருவாகியிருக்கிறது. அந்தப் படத்தில் இருந்த விறுவிறுப்பும் பரபரப்பும் இதில் காணவில்லை. அதில் விஜயசாந்தி வெளிப்படுத்தியிருந்த கோபமும், முறைப்பும், எமோஷனும் படத்துக்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. ஆனால் இந்தப் படத்தில் சினேகாவின் சீற்றம் குறைவுதான்.

காக்கி உடையில் விரைப்பாக வரும் சினேகா, பொன்னம்பலம், ராஜ்கnullர், கோட்டா, ஆர்யன் என பல வில்லன்களுடன் மோதுகிற காட்சிகள் செம ரகளை! விஜயசாந்தியை போல் இல்லாவிட்டாலும், ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு வஞ்சகம் செய்யாமல் கடுமையாக உழைத்ததற்காக சினேகாவைப் பாராட்டலாம். ஆனால் அவரது நடவடிக்கைகள் அனைத்தும் வீணாவது பலவீனம்தான்.

வில்லனாக மட்டுமில்லாது காமெடியிலும் கலக்கியிருக்கிறார் கோட்டா சீனிவாசராவ். சில இடங்களில் அவர் வசனம் பேசும்போது தியேட்டரில் சிரிப்பு மழைதான்! பொன்னம்பலம், ராஜ்கnullர், டெல்லி கணேஷ் என நிறைய பேர் நடித்துள்ளனர். சம்பத்துக்கு ஒரு சில காட்சிகளே என்றாலும் நெஞ்சில் நிற்கிறார்.

விவேக் ​ செல் முருகனின் டூ வீலர் காமெடி' சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது. தினாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். கதைக்கேற்ற விறுவிறுப்பான பின்னணி இசையில் குறை வைக்கவில்லை.

குடும்பப் பாங்கான பாத்திரங்களில் நடித்து வந்த சினேகாவை அதிரடி நாயகியாக போராட வைத்திருக்கிறார்.

விஜயசாந்தியை பார்த்த கதாபாத்திரத்தில்  சினேகாவை பார்க்கும்போது  மாற்றம் அதிகம் தெரிகிறது.  இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற படமாக தந்து இருக்கிறது இயக்குனர் கிச்சா.  பவானி ஐ.பி.எஸ். அதிரடியில் தியேட்டர் அதிர்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago