முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.குடன் உறவை வலுப்படுத்த இலங்கை அதிபர் தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,பிப்.12 - இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் உறவை மேலும் வலுப்படுத்த இலங்கை அதிபர் ராஜபக்சே பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பாகிஸ்தானுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே அந்நாட்டு அதிபர் ஜர்தாரியை சந்தித்து பேசினார். இலங்கை-பாகிஸ்தான் நாடுகளிடையேயான வர்த்தகத்தை வரும் 3 ஆண்டுகளில் 2 பில்லியனாக அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். இதேபோல் இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரத்தில் தொடர்ந்து உதவுவதாக பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி, ராஜபக்சேவுக்கு உறுதி அளித்துள்ளார். இலங்கைக்கு ராணுவ தளவாடங்களை வழங்கும் நாடுகளில் பாகிஸ்தானும் முதன்மையான நாடு என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையேயான கப்பல் போக்குவரத்தை இயக்குவது குறித்தும் இருநாட்டு அதிபர்களும் ஆலோசனை நடத்தினர். பாகிஸ்தான் பிரதமர் கிலானியையும் ராஜபக்சே சந்தித்து பேச உள்ளார். தக்சிலா என்ற இடத்தில் உள்ள புத்த விகாரில் ராஜபக்சே வழிபாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்