முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அருகே தொழிற்சாலையை முதல்வர் திறக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.12 - சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணலி பகுதியில் ஜப்பான் நாட்டு நிறுவனம் ரூ.800 கோடி முதலீட்டில் அமைந்துள்ள புதிய தொழிற்சாலையை இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

இது பற்றி விபரம் வருமாறு:- அனல்மின் நிலையங்களுக்கு தேவையான ஸ்டீம் டர்பைன் மற்றும் ஜெனரேட்டர்களை உற்பத்தி செய் புதிய தொழிற்சாலை, திருவொற்றியூரை அடுத்த மணலி ஆண்டாள் குப்பத்தில் அமைந்துள்ளது.

தமிழக அரசும், ஜப்பானின் தோஷிபா எலக்ட்ராணிக் நிறுவனமும், ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனமும் கூட்டாக சேர்ந்து தமிழகத்தில் ஸ்டீம் டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த தொழிற்சாலை 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் குத்தகை அடிப்படையில் அந்த நிறுவனங்கள் தமிழக அரசிடம் பெற்றுள்ளன. தற்போது ரூ.800 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் தொழிற்சாலையை இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா திறக்க உள்ளார். இதற்காக பால வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, கே.குப்பன் எம்.எல்.ஏ., மண்டலகுழுத்தலைவர் கே.தங்கசிவம், அ.தி.மு.க. நகரச்செயலாளர் டாக்டர் கே.சி.சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் எழுச்சியான வரவேற்பு தர உள்ளனர். மணலி மண்டல விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்