முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு உலைகள் மீது தண்ணீரை பீய்ச்சியடிக்கும் பணி மீண்டும் துவங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, மார்ச் - 21 - ஜப்பானில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வெடித்து  சிதறிய அணு மின் உலைகள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து குளிரச்செய்யும் பணிகள் நேற்று மீண்டும்  துவங்கப்பட்டன. ஜப்பானில் கடந்த 11-ம் தேதி 8.9 என்ற ரிக்டர் அளவுக்கு அதிக சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மிகப்பெரிய சுனாமியும் ஏற்பட்டது. இந்த பூகம்பம் மற்றும் சுனாமியில் சிக்கி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பூகம்பத்தில் புகுசிமா  என்ற இடத்தில் உள்ள அணு மின்சார நிலையம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த அணு மின் நிலையத்தில் உள்ள 6 அணு மின் உலைகளில் 4 உலைகள் வெடித்து சிதறின. மேலும் இந்த  அணு உலைகளில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அணு கதிர்வீச்சு அதிகரித்து மக்களை தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெடித்து ச்சிதறிய அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சுக்கள் பரவாமல் தடுக்க  அணு உலைகளை மண்ணிற்குள்ளேயே புதைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏன்றாலும்  அணு உலை வெடிப்பால் பரவும் வெப்ப கதிர்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த அந்த உலைகள் மீது கடல் நீரை பீய்ச்சியடித்து குளிர்விக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஏற்கனவே ஒரு முறை பாதிக்கப்பட்டுள்ள அணு உலைகள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் பணிகள் நடத்தப்பட்டன.

நேற்று மீண்டும் இதே முறையில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணிகள் துவங்கின.

இந்த பணி பல மணி நேரம் நடைபெற்றது என்று அணு சக்தி பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்றாவது அணு உலை மீது மட்டும் 2,000 டன் தண்ணீர் இது வரை பீய்ச்சியடிக்கப்பட்டுள்ளது என்று தீ அணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணு உலை அருகில் அதிகமான வெப்பம் இருப்பதால் ஆளில்லாத வாகனங்கள் மூலம் இந்த தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டதாக அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர வைப்பதன் மூலம் அணு உலைகளில் இருந்து மேற்கொண்டு தீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்