முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் ஜப்பானிய முதலீட்டுக்கு சாதகமான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப். - 13 - இந்தியாவில் தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு செய்ய ஜப்பானியர்கள் ஆர்வம் காட்டுவதாகவும், அதற்கு சாதகமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுவதாக முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.  சென்னை மணலியில் தோஷிபா நிறுவனத்தின் nullராவி விசையாழி மற்றும் ஜெனரேட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை முதல்​ அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-​   இந்த நிறுவனம் ரூ.650 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது இங்கு 370 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய ராவி விசையாழி மற்றும் ஜெனரேட்டர்கள் இங்கு தயாரிக்கப்பட உள்ளன. அதிநவீன தொழில்நுட்ப திட்டத்தினால் உருவாக்கப்படும் இந்த எந்திரங்களால் மின்உற்பத்திக்கு நிலக்கரியின் தேவை குறையும். இந்த திட்டம் இந்தியா​ஜப்பான் இடையே பொருளாதார மேம்பாட்டுக்கான மேலும் ஒரு மைல் கல்லாகும்.   இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே கலாச்சார பரிவர்த்தனை என்பது ஒரு nullநீண்ட வரலாறு ஆகும். இந்தியாவில் தோன்றிய புத்த மதம் சீனாவிலும் பின்னர் ஜப்பானிலும் பரவியது. ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான கலாச்சார பண்பாடு புத்தமதம் தோன்றிய 6​வது நூற்றாண்டிலேயே ஏற்பட்டது. தற்போது இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஜப்பானின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. 21-​ம் நூற்றாண்டில் இந்த இரு நாடுகளும் சர்வதேச அளவில் வர்த்தக பங்குதாரர்களாக செயல்பட்டு வருகின்றன.   கடந்த 3 ஆண்டுகளில் சீனாவுக்கு அடுத்தப்படியாக ஜப்பான் கம்பெனிகளுக்கு பெரிய அளவிலான வர்த்தக தளத்தை இந்தியா வழங்கி வருகிறது.  இந்தியாவில் ஜப்பானியர்கள் முதலீடு செய்ய மிக சாத்தியமான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தற்போது இந்தியாவில் 1,422 ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 286 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. சென்னையில் மட்டும் 700 ஜப்பானியர்கள் தங்கி உள்ளனர். தற்போது அதிக அளவிலான ஜப்பான் கம்பெனிகள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆலோசித்து வருகின்றனர். அந்த கம்பெனிகளுடன் எனது அரசு விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது.   தமிழ்நாட்டில் அதிக அளவு முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கும் ஜப்பானிய முதலீட்டாளர்களை பாராட்டுகிறேன். பொதுவாக ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் சாதகமான நிலை உள்ளது. ஏனெனில் இங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை இல்லை. இங்கு மனிதவளம் மேம்பாடு அதிக அளவில் உள்ளது. திறமைசாலிகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. எனவே, ஜப்பானியர்கள் முதலீடு செய்ய சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இவ்வாறு முதல்​அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்