முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்பரேசனுக்குப் பிறகு அமிதாப் வீடு திரும்பினார்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      சினிமா
Image Unavailable

மும்பை, பிப்.- 13 - அடி வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் குணமடைந்து வருகிறார். நேற்று பிற்பகலில் அவர் வீடு திரும்பினார்.  பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அடிவயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அடிவயிற்றில் ஆப்பரேசன் செய்யப்பட்டது. இந்த ஆப்பரேசன் வெற்றிகரமாக முடிந்தது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவர்கள் கூறினர். அதேபோல அவர் நேற்று பிற்பகலில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். தனக்கு வலி இருக்கிறது என்றும், ஆனால் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அந்த வலி விரைவில் குறைந்துவிடும் என்று தான் நம்புவதாகவும், ட்விட்டர் இணையதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நான் பூரண உடல் நலம் பெறுவதற்காக கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்த தனது ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் அந்த இணைய தளத்தில் தெரிவித்துள்ளார். அமிதாப்பச்சனுக்கு சுமார் 3 மணி நேரம் ஆப்பரேசன் நடந்ததாகவும் அந்த ஆப்பரேசன் வெற்றிகரமாக முடிந்ததாகவும் அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்