முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரிய ராணுவம் எல்லையில் போர் ஒத்திகை

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

சியோல், பிப்.- 13 - வட கொரியாவை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் தென் கொரிய ராணுவத்தினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனால்  இந்த இரு நாடுகளின் எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகள் பகைமை பாராட்டி வருகின்றன. வட கொரியாவுக்கு எதிராகவும் தென் கொரியாவுக்கு ஆதரவாகவும்  அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.  வட கொரியா ராணுவம் 12 லட்சம்  வீரர்களை கொண்ட பலமான ராணுவமாக இருக்கிறது. ஆனால் தென்கொரிய ராணுவம் சற்று பலவீனமான நிலையில் இருக்கிறது.  அதனால் தென் கொரிய ராணுவத்திற்கு பக்க பலமாக இருக்க தென் கொரிய எல்லையில் அமெரிக்கா தனது  ராணுவத்தை குவித்து வைத்துள்ளது.  தென் கொரியாவை வட கொரியா தாக்கினால் அதை முறியடிக்க அமெரிக்கா தனது படைகளை இங்கே குவித்து வைத்திருக்கிறது. இதனால் வட கொரிய - தென் கொரிய எல்லை எப்போதும் பதட்டம் நிறைந்த பகுதியாகவே காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென் கொரியா நேற்று வட கொரியாவை ஒட்டியுள்ள எல்லை பகுதியில் போர்  ஒத்திகையில் ஈடுபட்டது. நீரிலும் நிலத்திலும் இயங்கக்கூடிய டாங்கிகள், அதி நவீன போர் விமானங்கள் என்று பல்வேறு விதமான ஆயுதங்களுடன் தென் கொரிய ராணுவத்தை  சேர்ந்த 1000 வீரர்கள் நேற்று இந்த  போர் பயிற்சியில் ஈடுபட்டனர். தென் கொரியாவின் இந்த போர் பயிற்சிக்கு  பதிலடி கொடுக்கும் வகையில் வட கொரியாவும் எல்லையில் உள்ள தனது ராணுவத்தை உஷார்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony