முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிகடனை திரும்பகேட்டு மிரட்டியதால் கூலிப்படை ஏவி பெண்களே கொன்றனர்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப். - 13 -  போரூரில் நள்ளிரவில் குத்திக் கொல்லப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் கொலை வழக்கில் துப்புத்துலங்கியது. போலி ஆவணம் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ.50 லட்சம் கடனை பற்றி போலீசில் புகார் அளிக்காமல் இருக்க ரூ.15 லட்சம் கேட்டு அம்பிகா மிரட்டியதால் கடன் பெற்ற பெண்கள் 3 பேர் கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதையொட்டி 3 பெண்கள், கொலையாளிகள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் வசித்து வந்த சுயஉதவி குழு துணைத்தலைவி அம்பிகா கடந்த மாதம் 23-​ந்தேதி நள்ளிரவில் வீட்டு அருகே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.   போலீஸ் வேடத்தில் நள்ளிரவில் வீடு புகுந்த கொலையாளிகள் விசாரணை என்ற பெயரில் அவரை அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  கொலையாளிகளை பிடிக்க கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில் இணை கமிஷனர் சங்கர் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.   தனிப்படையினர் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். அம்பிகா மகளிர் சுய உதவிக்குழு சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த பலருக்கு கடன் வாங்கி கொடுத்து இருப்பது தெரிய வந்தது. கடன் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன் பேரில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.   இந்த கொலை தொடர்பாக 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:​ 1. அன்னமுத்து, ஒரகடம், அம்பத்தூர் 2. திலீபன், குன்றத்தூர். 3. ராஜ்குமார், கள்ளிக்குளம், அம்பத்தூர் 4. இன்னொரு ராஜ்குமார், ஒரகடம். இவர்களில் அன்னமுத்துவும், ராஜ்குமாரும் ஊர்க்காவல் படை வீரர்கள்.   அதே பகுதியைச் சேர்ந்த மாலா, சுமித்ரா, சுசிலா ஆகிய 3 பெண்களுக்கும் மகளிர் சுயஉதவிக்குழு மூலமாக அம்பிகா போலி ஆவணம் மூலம் ரூ. 50 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.  இந்த கடனை அவர்கள் ஒழுங்காக திருப்பி செலுத்தவில்லை. இதனை அம்பிகா கண்டித்தார். இதனால் 3 பெண்களுக்கும், அம்பிகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.   இதையடுத்து சுமித்ரா, தனக்கு தெரிந்த ஊர்க்காவல் படை வீரர் அன்னமுத்து மூலமாக அம்பிகாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்காக போரூர் பகுதிக்கு வந்திருந்த அன்னமுத்துவுக்கும், சுமித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சுமித்ரா, மகளிர் சுய உதவிக் குழு தலைவி அம்பிகாவின் தொந்தரவு பற்றி கூறினார். அவரை எப்படியாவது தீர்த்துக் கட்டினால்தான் நாங்கள் 3 பேரும் நிம்மதியாக வாழ முடியும் என்று அன்னமுத்துவிடம் கூறினார்.  இதன் பிறகு கொலைக்கான சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அம்பிகாவை போலீஸ் என்று கூறி அழைத்தால்தான் வருவார் என்று கூறியுள்ளார். இதற்காக தொகை பேசப்பட்டு முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை சுமித்ரா கொடுத்துள்ளார். அன்னமுத்து தனது நண்பர்களான ராஜ்குமார், தீலிபன், இன்னொரு ராஜ்குமார் ஆகியோருடன் பேசி அம்பிகாவை கொலை செய்வது பற்றி ஆலோசனை நடத்தினார். கடந்த 23-ந்தேதி நள்ளிரவில் 4 பேரும் 2 மோட்டார்சைக்கிள்களில் போரூர் சென்றுள்ளனர். பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அம்பிகா வசித்து வரும் கெருகம்- பாக்கத்துக்கு நடந்து சென்றனர். அன்னமுத்துவும், ராஜ்குமாரும் ஊர்க்காவல் படை சீருடையில் அம்பிகாவின் வீட்டுக்குள் சென்றனர். அங்கிருந்த அம்பிகாவிடம் போலீஸ் என்று கூறிய இருவரும் சுயஉதவிக்குழு கடன் சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி வெளியே அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.   இந்த வழக்கில் அம்பிகாவை கொலை செய்ய தூண்டிய சுமித்ரா, சுசிலா, மாலா ஆகிய 3 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடன் தகராறில் பெண் களே ஆட்களை ஏவி இன்னொரு பெண்ணை கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    இந்த கொலை தொடர்பாக 3 பெண்களில் ஒருவரான சுமித்ரா போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:​ எனக்கும், எனது தோழிகள் சுசிலா, மாலா ஆகியோருக்கும் அம்பிகா சுயஉதவிக்குழு மூலமாக போலி ஆவணம் தயாரித்து காஞ்சீபுரம் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ. 50 லட்சம் கடன் வாங்கி கொடுத்தார். அந்த வங்கியில் தீ விபத்து ஏற்பட்டு ஆவணங்கள் எரிந்து நாசமாகி விட்டது. இதனால் கடனை திருப்பி செலுத்த வேண்டாம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அம்பிகா எங்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார்.   
ரூ.15 லட்சம் தனக்கு தந்தால் காட்டிக் கொடுக்காமல் இருப்பதாக தொந்தரவு கொடுத்தார். அம்பிகா உயிரோடு இருந்தால் எங்களை காட்டி கொடுத்து விடுவார் என்று பயந்தோம்.  இதையடுத்து ஊர்க்காவல் படை வீரர் அன்னமுத்துவிடம் இதனை தெரிவித்தேன். அவர் நான் பார்த்துக் கொள்கிறேன். இதற்கு மேல் உங்களுக்கு பிரச்சினை ஏதும் இருக்காது என்று கூறினார். இதன் பிறகு அம்பிகாவை கொலை செய்ய திட்டம் தீட்டி ரூ. 50 ஆயிரம் பணத்தை அவரிடம் கொடுத்தோம். அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து அம்பிகாவை கொலை செய்தனர். இவ்வாறு சுமித்ரா போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
பெண்களே கூலிப்படையை ஏவி பெண்ணை கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago