முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சட்டத் திருத்தம் உயர்நீதிமன்றத்தில் அரசுதகவல்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.- 13 - உள்ளாட்சி தேர்தலில் வாய் பேச முடியாத, கேட்கும் திறனற்ற மாற்று திறனாளிகள் போட்டியிட வசதியாக பஞ்சாயத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உத்தேசித்துள்ளதாக தமிழக அரசின் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  சென்னை ஐகோர்ட்டில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த எல்.கே.வெங்கட் பொது நலமனு தாக்கல் செய்தார். அதில், வாய் பேச முடியாதவர்களும் கேட்கும் திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள் என்று தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய உரிமையை தராமல் அதற்கு தடை விதிக்கும் அதுபோன்ற சட்டப் பிரிவை நீnullக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை நீnullதிபதிகள் டி.முருகேசன், பி.பி.எஸ்.ஜனார்த்தனராஜா ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.மோகன் ஆஜரானார். தமிழக அரசு சார்பில் அரசு கூடுதல் வக்கீல் விஜயகுமார் ஆஜராகி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் எழுதிய கடிதம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், `வாய் பேச முடியாதவர்கள் மற்றும் கேட்கும் திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளையும் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்க அனுமதிப்பதற்கு வகை செய்ய வேண்டுமானால், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அதற்கான திருத்தத்தை கொண்டு வருவதற்கான மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய அரசு முயற்சி எடுத்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. அரசின் இந்தத் தகவலை பதிவு செய்த நீnullதிபதிகள், மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்